Home Blog Page 81

பயங்கரவாதிகள் குறித்து கண்காணிப்பின்றி கோட்டை விடும் தமிழக உளவுத்துறை!

kadeswara subramaniam hindu munnani - 2026

தமிழகத்தில் இஸ்லாமிய மத பயங்கரவாதச் செயலை கண்காணிக்காமல் இருக்கும் தமிழக உளவுத்துறை மற்றும் தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

1998 ஆம் ஆண்டு அல் -உம்மா பயங்கரவாதிகளால், கோவையில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்து 58 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய, முக்கிய குற்றவாளிகளை கடந்த வாரம் முதல் தமிழக பயங்கரவாத தடுப்பு போலீசார்(ATS) கைது செய்து வருகின்றனர். பிடிபட்ட பயங்கரவாதிகளிடமிருந்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் விசாரணையில் தெரிய வருகிறது .

இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளான அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர் தங்களது வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை தந்துள்ளனர்.

அதில் அவன், அல்-உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா தங்கள் ஊரான நாகப்பட்டினத்திற்கு வந்து ரகசிய கூட்டங்கள் நடத்தி போலீஸாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்ற வித்தைகளை கற்றுக் கொடுத்தார் எனக் கூறி இருப்பதும்,

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தபோதும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு வெடி மருந்துகள் வாங்க இரண்டு முறை வந்ததாகவும் தெரிவித்து இருப்பது, தமிழ் உளவுத்துறை செயலிழந்து இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தேடப்படும் பயங்கரவாதிகளான இவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக வந்து வெடி பொருட்களுக்கான மருந்துகள் வாங்கிய போது தமிழக உளவுத்துறை உறக்கத்தில் இருந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? இவர்கள் வெடி மருந்துகள் வாங்கி மீண்டும் ஒரு சதித் திட்டத்தை அரங்கேற்ற முயற்சி செய்தார்களா? என்பதை பற்றி தமிழக காவல்துறை, இவர்கள் பிடிபடும் வரை கண்டுகொள்ளவில்லையா? என்பதும் பல சந்தேகங்களை எழுப்புகிறது .

பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி பெற்ற இவர்கள் தமிழகத்தில் நாச வேலைக்கு சதி செய்துள்ளனர். அது மட்டுமல்லாது இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன், பாஜக நிர்வாகி அரவிந்த ரெட்டி ஆகியோரை படுகொலை செய்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய மூவரும் அபூபக்கரிடம் பயிற்சி பெற்றவர்களாக அவன் சொன்ன வேலையை செய்து முடித்துள்ளனர். பல படுகொலைகளுக்கு இவன் மூளையாக செயல்பட்டுள்ளான்.

இந்து முன்னணி வெள்ளையப்பன், பாடி சுரேஷ், பாஜகவின் அரவிந்த் ரெட்டி ஆகியோர் ஜிகாதிகளால் கொலை செய்யப்பட்ட பொழுதே இதற்குப் பின்னணியில் மிகப்பெரிய பயங்கரவாத சதி இருக்கிறது என்று இந்து முன்னணி தெரிவித்தது.

உடனடியாக தலைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் இந்து முன்னணி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது.

ஆனால் அதனை அலட்சியப்படுத்திய காவல்துறை உயர் அதிகாரி ராமானுஜம் அவர்கள், ஒவ்வொரு கொலைக்கும் வேறு வேறு பொய்யான காரணங்களைச் சொல்லி அறிக்கையாக வெளியிட்டார்.

காவல்துறையின் அலட்சியப் போக்கால் துணிச்சல் பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொடர் கொலைகளில் ஈடுபட்டனர்.

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் பண முதலைகளாக மாறி உள்ளதைக் கூட அறியாதவர்களாக உளவுத்துறை இருந்திருக்கிறது.

தற்போது பிடிபட்டிருக்கும் அபூபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோருக்கு பயிற்சி தந்த கொடூரன் பாஷா இறந்தபோது பல்வேறு அரசியல் கட்சியினர் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பயங்கரவாதி பாஷாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அரசியல்வாதிகள், இந்த பயங்கரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கிறார்களா என்று கேள்வி எழுகிறது.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பயங்கரவாதி பாஷாவை அப்பா என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தற்போது அபூபக்கர் சித்திக்கின் தூண்டுதலால் இந்து இயக்க தலைவர்களை கொலை செய்த போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் போன்ற கொடிய பயங்கரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என சீமான் குரல் கொடுக்கிறார்.

அப்படி என்றால் பயங்கரவாதிகளுக்கும் சீமானுக்கும் தொடர்புள்ளதா? என்ற கோணத்திலும் தீர விசாரிக்க வேண்டும்.

மத்திய அரசின் மூலம் தகவல் பெற்று பயங்கரவாத தடுப்பு போலீஸார் இவர்களை பிடித்துள்ளனர். ஏ. டி .எஸ் உருவாக்கப்படுவதற்கு முன்பு தமிழக உளவுத்துறையும், காவல்துறையும், பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை அறியாமல் இருந்ததே பல படுகொலைகளுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இவர்கள் எங்கிருந்து, எதற்காக வெடி மருந்துகள் வாங்கினார்கள், இன்னும் என்னென்ன சதி செயலுக்கு திட்டம் தீட்டி இருந்தார்கள் என்பது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும்.

அது மட்டுமன்றி இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையும், பண உதவி செய்தவர்களையும், இந்த பயங்கரவாதிகளின் உறவினர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்!

நல்லதங்காள் கோயிலில் அறநிலையத்துறை பாலாலயம் செய்ய எதிர்ப்பு; மக்கள் தீக்குளிக்க முயற்சி!

nallathangal temple issue - 2026

வத்திராயிருப்பு அருகே நல்லதங்காள் கோயிலில் அறநிலையத்துறை பாலாலயம் நடத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; பக்தர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பு அருகே  அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோயில்.   தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும்,  அண்ணன் தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய நல்லதங்காள்,  அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த தனது ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.   

அவர் தற்கொலை செய்து கொண்ட கிணறு அவர் தங்கிய  இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும் கோயிலாகவும் எழுப்பப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. 

 அக்கோயிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோயில் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி    கோயில்  கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் புதிய சிலை வைப்பதற்காக அக்கோயிலில் பாலாலயம் செய்தனர். அதற்கான பணிகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலைத்துறை சார்பாக பாலாலயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அதிகாரிகள் அங்கு வருவதாக இருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயிலுக்குள் பொதுமக்கள் செல்லாமல் போலீசார் தடுத்ததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளும் முள்ளும் ஏற்பட்டது. கிராம மக்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் பாட்டில்களை அப்புறப்படுத்தினர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏ டி எஸ் பி அசோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தைக் கண்டித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று அறிவித்தது. அந்த அமைப்பின் சார்பில் பா.சரவண கார்த்திக் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள புகழ் பெற்ற நல்லதங்காள் கோவிலை ஊர் மக்களிடம் இருந்து கைப்பற்ற அறநிலையத்துறை காவல்துறையை வைத்து பொதுமக்களை மிரட்டுவது, கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பொதுமக்களை திரட்டி மிக பெரிய அளவில் காவல்துறை மற்றும்
அறநிலையத்துறையை கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் திருக்கோவில் அர்ச்சக்
புரோகித் பேரமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும். பொதுமக்கள் இத்தனை ஆண்டுகளாக தங்கள் சொந்த பணத்தில் பராமரித்த ஒரு கோவிலை அறநிலையத்துறை கைப்பற்ற நினைப்பது வெட்கக்கேடானது. ஹிந்துக்களிடமிருந்து கோவிலை அபகரிக்கும் செயலை விட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள புகழ் பெற்ற நல்லதங்காள் கோவிலை ஊர் மக்களிடம் இருந்து கைப்பற்ற அறநிலைய துறை காவல்துறையை வைத்து மக்களை மிரட்டுவது கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது. பொது மக்களை திரட்டி மிக பெரிய அளவில் காவல்துறை மற்றும் அறநிலைய துறையை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்..” என்று, விருதுநகர் மாவட்ட பாஜக., சார்பில் ஸ்ரீவி ராஜா குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் மது பாட்டிலால் தாக்குதல்; ஆசிரியர் மண்டை உடைப்பு!

teacher attacked by student by tasmac bottle - 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் சீ. ரா. அரசு மேல்நிலை பள்ளியில் 4 மாணவர்கள் மது போதையில் வந்தனர்

மது போதையில் வந்த மாணவர்களை தட்டி கேட்டு தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்வதாக கூறிய பொது அறிவியல் பிரிவு ஆசிரியர் சண்முக சுந்தரத்தை மறைத்து வைத்திருந்த மது பாட்டிலால் தலையில் தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது

நான்கு பேரில் இருவர் அது போதையில் இருந்ததும் ஆசிரியரை கடந்த ஆண்டு செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்ததால் திட்டமிட்டு தாக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

மு.க. ஸ்டாலின் முதலில் செய்ய வேண்டியது இதைத்தான்!

kamarajar birthday - 2026

செய்தியும் சிந்தனையும்!

சிதம்பரம் அரசு மேநிலைப்பள்ளியில் நடைபெற்ற காமராஜரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, மலர் தூவி மரியாதை செய்து, பெரியார் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தியவர் காமராஜர் – என்று கூறியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

உண்மையில் காமராஜரைத் தொடுவதற்கு திமுக., தகுதியானதா என்பது தமிழகத்தின் வரலாறு அறிந்தவர்கள் முன் உள்ள கேள்வி!

காமராஜரை பற்றி கருணாநிதி கூறியவை…

அண்டங்காக்கா,எருமைத் தோலர், காண்டாமிருகத் தோலர், பனை ஏறி,மரமேறி, நாடான், சாணான், நனைச்ச பனை, கட்டைப்பீடி காமராஜர், கோமாளி ராஜா, அறிவிலி, அலி, வெறுந் தலைவன் என்று 1 சதவிகிதம் கூட அரசியல் நாகரீகமோ, பண்பாடோ இல்லாமல், வாய்க்கு வந்தபடி காமராஜரை வசைபாடியவர் கருணாநிதி

விருதபட்டியில், கருவாட்டு வியாபாரம் செய்த, கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் தான் இந்த காமராஜர் என்றவர் கருணாநிதி.

” துறவியாகிவிட்ட பட்டினத்தடிகளை, அவர் தாய் துறந்து விட்டதை போல, நானும் என் மகனை இந்த நாட்டுக்காக, துறந்து விட்டு நிற்கிறேன் “ என்று மூத்த எழுத்தாளர் சாவியிடம், கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார், காமராஜரின் தாய் சிவகாமி அம்மையார்.

அந்த புண்ணியவாதியைத்தான், “ கருவாட்டக்காரி “ என்று கரித்துக்கொட்டினார் கருணாநிதி.

4000 நாட்களுக்கு மேல், கொடுஞ்சிறையில் கழித்த தாலும், குடும்பம், குழந்தை, குட்டிகள் என்றிருந்தால், பரிசுத்தமாக மக்கள் பணியாற்ற முடியாது என்றும், தன் தாய் எவ்வளவோ வேண்டியும், “ திருமணம் வேண்டாம் “ என்று மக்கள் தலைவராக திகழ்ந்தார் காமராஜர்.

அதற்கு, “ காமராஜருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை “ என, ‘ நாகரீகத்தோடு ‘ நல்கினார் கருணாநிதி.

“ காமராஜர் என்ன மெத்த படித்தவரா? முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு எருமை தோலை தான், இந்தியா ஏற்றுமதி செய்தது. இன்று எருமையையே அனுப்பியுள்ளது “ என காமராஜர், ரஷ்யா சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பொறாமைப்பட்டு பேசினார் கருணாநிதி.

இன்னும், இன்னும் ஏராளம்…

இன்றோ….கருணாநிதியின் தவப்புதல்வன் மு.க.ஸ்டாலின், காமராஜர் புகழை ஓங்கி உரக்க முழங்குகிறார்.

ஸ்டாலின் அவர்களே, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே… ” கர்ம வீரர், தியாக சீலர் காமராஜரை இழித்தும், பழித்தும் பேசிய என் தந்தை கருணாநிதி அவர்கள் செய்த தவற்றிற்கு ( பாவத்திற்கு ) நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் ” என்று பகிரங்கமாக அறிவித்தால் போதுமானது.

காமராஜரின் படத்திற்கு மாலை அணிவிப்பது போன்ற போலித்தனங்களில் நீங்கள் ஈடுபடாதீர்கள் !!

  • யா.சு.கண்ணன்

வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பிய சுபான்ஷு சுக்லா; குவியும் வாழ்த்துகள்!

subhanshu sukla - 2026

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மேற்கொண்ட பயணத்தை முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக கடலில் தரையிறங்கினர்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா குழுவினர் இன்று, பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.  22 மணி நேர பயணத்திற்குப் பின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது. அதை அடுத்து, சுக்லா உள்ளிட்டோர் வெளியே அழைத்து வரப்பட்டனர். சுபான்ஷூ சுக்லாவுக்கு பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ ஆகியவை இணைந்து அமெரிக்காவின் ‘ஆக்சியம் ஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டது. இத்திட்டத்தின்படி, இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25ம் தேதி, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், ‘பால்கன் 9’ ராக்கெட் வாயிலாக பூமியில் இருந்து புறப்பட்டனர்.  அவர்களைச் சுமந்து சென்ற ‘டிராகன்’ விண்கலம், 28 மணி நேர பயணத்திற்குப் பின் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. 

அவர்கள் நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்த இவர்கள், விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர். பின்னர் தங்கள் பயணத்தை நிறைவுசெய்து திட்டமிட்டபடி டிராகன் விண்கலம் வாயிலாக நேற்று பூமியை நோக்கி புறப்பட்டனர். 22 மணி நேர பயணத்திற்குப் பின், அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்பில் இன்று மாலை 3 மணிக்கு, ‘ஸ்ப்லாஷ் டவுன்’ முறையில் டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது.

தொடர்ந்து அந்த விண்கலம் கப்பலுக்குக் கொண்டு வரப்பட்டு, கதவு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திறக்கப்பட்டது. விண்கலத்தில் இருந்து முதலாவதாக நாசாவின் பெக்கி விட்சன் வெளியே அழைத்து வரப்பட்டார். இரண்டாவது நபராக சுபான்ஷூ சுக்லா விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார். மற்றவர்களும் அடுத்தடுத்து வெளியே அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் 7 நாட்கள் தனிமையில் இருப்பார்கள்.

சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்பியதை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேரலையில் பார்த்தனர். லக்னோவில் உள்ள சிட்டி மான்டெசரி பள்ளியில் சுக்லாவின் குடும்பத்தினர் நேரலையில் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பின் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். சுபான்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா செய்தியாளர்களிடம் பேசிய போது, என் மகன் பாதுகாப்பாக திரும்பியுள்ளார். இறைவனுக்கு நன்றி. இந்த நிகழ்வை வெளியில் நின்று, தகவல்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் உணர்ச்சிவசப்பட்டேன்.எப்படியிருந்தாலும், என் மகன் பல நாட்களுக்குப் பிறகு திரும்பியுள்ளார் என்று கூறினார்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: விண்வெளிக்கான வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையணத்தை பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, தன அர்ப்பணிப்பு, தைரியம் மூலம் 100 கோடி மக்களின் கனவுகளுக்கு முன்மாதிரியாக உள்ளார். இது, நமது சொந்த விண்வெளி பயணமான ககன்யானை ககன்யானை நோக்கிய மற்றொரு மைல்கல் ஆகும் எனத் தெரித்துள்ளார்.

இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக விண்வெளி பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சுபான்ஷு சுக்லா.

திருச்சி: ஜூலை 16 முதல் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமே செயல்படும்!

bus - 2026

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் வெளியிட்ட அறிவிப்பில் கண்ட தகவல்…

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயக்கப்பட்ட அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்ததாவது:

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் கொண்டு இயக்கப்படும் அனைத்து புறநகர பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு 16.07.2025 அன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

விரைவுபேருந்துகள் / புறநகரப் பேருந்துகள். 

சென்னை/திருப்பதி/வேலூர்/விழுப்புரம்/காஞ்சிபுரம்/புதுச்சேரி மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.

தஞ்சாவூர்/கும்பகோணம்/வேளாங்கண்ணி/காரைக்கால் மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் துவாக்குடி, திருவெறும்பூர், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட் மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் முனையத்திற்கு செல்லவேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால்பண்ணை வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.

நாமக்கல்/சேலம் /பெங்களுரு மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் பேருந்துகளும் நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், அனைத்து மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை, டிவிஎஸ் டோல்கேட், நெ.1 டோல்கேட் வழியாக திரும்பச் செல்லவேண்டும்.

புதுக்கோட்டை/அறந்தாங்கி/ராமேஸ்வரம் மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

கரூர்/ஈரோடு/திருப்பூர்/கோயம்புத்தூர் மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் சத்திரம் பேருந்து நிலையம், கரூர் புறவழிச்சாலை, சாஸ்திரி சாலை, மாவட்ட நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வ.உ.சிசாலை, மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.

மணப்பாறை/திண்டுக்கல்/பழனி/குமுளி மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும் கருமண்டபம், மன்னார்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

மதுரை/தூத்துக்குடி/விருதுநகர்/திருநெல்வேலி மார்க்கம்

மேற்கண்ட வழித்தடங்களில் திருச்சி நோக்கி உள்வரும்  அனைத்து பேருந்துகளும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையம் வரை செல்ல வேண்டும். இவைபஞ்சப்பூர் முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்ல வேண்டும்.

நகரப் பேருந்துகள்

மத்திய பேருந்து நிலையத்தை முனையமாகக் (Terminus) கொண்டு இயங்கும் அனைத்து நகரப் பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையம், மன்னார்புரம் வழியாக பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு செல்ல வேண்டும். இவை பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து இதே வழிதடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.

ஆம்னி பேருந்துகள்

மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊர்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. இவை பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள காலி இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்.

உள் வருகை மற்றும் வெளிச்செல்கை (Entry and Exit)

அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்திற்கு உள்வரும்போது (Entry) காவல் சோதனை சாவடி எண்.2 (CP-2) வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும். பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் (Exit) அனைத்து பேருந்துகளும் (மதுரை மார்க்கம் தவிர்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூர் சந்திப்பு வரை சென்று திரும்பி (U Turn) செல்ல வேண்டும்.

பயணிகளுக்கான வசதிகள்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் போன்ற உணவு பொருட்கள் விற்பனைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை ஒவ்வொரு மணி நேரமும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க 228 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து தூய்மை செய்யும் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

பயணிகள் மற்றும் அவர்தம் உடைமைகளின் பாதுகாப்பிற்கு காவல் துறையினர் 52 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகளின் தேவைக்கேற்ப ஆட்டோ, டாக்ஸி மற்றும் இ-டாக்ஸி சேவைகள் வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

பயணிகளுக்கு உதவி செய்ய தன்னார்வலர்கள் 30 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்து முனையத்திற்குள் நடந்து  செல்ல சிரமப்படும் நோயாளிகள் முதியவர்கள் பயன்பாட்டிற்காக 3 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. 

பயணிகளின் அவசரத் தேவைக்காக அழைப்பின் பேரில் (On call) மருத்துவர் குழு (Health Desk) தயார் நிலையில் உள்ளது

உசிலம்பட்டியில் காமராஜர் பிறந்த நாள் விழா

kamaraj birthday celeb in madurai - 2026

உசிலம்பட்டியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கொண்டாட்டம்!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில், முன்னாள் முதல்வரும் மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பெருந் தலைவர் காமராஜரின் 123 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காமராஜர் வேடமணிந்து ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி பிறந்த நாளை கொண்டாடினர் .

இந்த ஊர்வலம் நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில், தொடங்கி கவணம்பட்டி சாலை, பேரையூர் சாலை என உசிலம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் நிறைவு செய்தனர்.

இதனை, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி தலைமையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மதன் பிரபு முன்னிலையில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, காங்கிரஸ் கட்சியின் சார்பில் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதேபோன்று, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முருகன் கோவில் அருகில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் தந்தை தொல்காப்பியர் நினைவு தினத்தை முன்னிட்டு,
திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி பிறந்தநாள் மற்றும் வீரவணக்கம் செலுத்தினர்.

ஈரோடு – செங்கோட்டை ரயிலும் பகுதி ரத்து! மதுரைக்கு தற்காலிக ரயில்!

railway news - 2026
#image_title

ஈரோடு செங்கோட்டை ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியாக ரத்து செய்யப்படுவதால் பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை கோட்ட ரெயில்வேயில் நடக்கும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16845/16846) திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படுவதால், பயணிகளின் வசதிக்காக மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06846) வருகிற 18-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை செங்கோட்டையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06845) வருகிற 17-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த சிறப்பு ரெயிலில் 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் எண் 16845 ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ், ஜூலை 22 தவிர, ஜூலை 17 முதல் 26 வரை திண்டுக்கல் – செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ஒன்பது நாட்களிலும், ஈரோடு சந்திப்பு – திண்டுக்கல் சந்திப்பு இடையே மட்டுமே ரயில் இயங்கும். திண்டுக்கல் சந்திப்பு – செங்கோட்டை இடையே இயக்கப்படாது.

இதேபோல், செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் ரயில் எண் 16846 செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ், ஜூலை 23 (ஒன்பது நாட்கள்) தவிர, ஜூலை 18 முதல் 27 வரை செங்கோட்டை – திண்டுக்கல் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த நாட்களில், செங்கோட்டை – திண்டுக்கல் சந்திப்பு இடையே ரயில் இயங்காது, ஆனால் திண்டுக்கல் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்பு வரை இயக்கப்படும்

அமெரிக்கா சீனா குறித்து… இரண்டு இந்திய அமைச்சர்கள்; ஒரே அணுகுமுறை!

jaishankar - 2026
  • செல்வ நாயகம்

சீனாவில் டாக்டர் ஜெய்ஷங்கர்!

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா வாலாட்டி வாலறுத்ததோடு சீனா நாட்டுக்குச் செல்லவில்லை நம் வெளியுறவுத் துறை அமைச்சர்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின் நேற்று சீனா விஜயம் செய்திருக்கிறார் டாக்டர் ஜெய்ஷங்கர்.

அவரைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, “சீனாவும் இந்தியாவும் நல்ல அண்டை நாடுகளாக இருந்து நட்புறவை கடைப்பிடிக்க வேண்டும். பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை, அமைதியான சகவாழ்வு, வளர்ச்சி மற்றும் பரஸ்பர வெற்றிக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை முன்னெடுக்க வேண்டும்” என்ற ரீதியில் அறிக்கை விட்டிருக்கிறார்.

டாக்டர் ஜெய்ஷங்கர் இந்த வழ வழ அறிக்கை விடவில்லை. தெளிவாக, “பாரத எல்லையில் பிரச்சினை செய்வதை நிறுத்த வேண்டும் சீனா. பாரதத்துக்கு எதிரான வர்த்தக முடக்கங்களைச் செய்வதை சீனா நிறுத்த வேண்டும். சீனா mutual respect, mutual interest and mutual sensitivity ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.” என்றும், “உலகம் (அமெரிக்காவின்) ஒருமுகத் தன்மையிலிருந்து பன்முகத் தனமையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. உலகின் பழைய ஒழுங்கு முறை போய்க் கொண்டிருக்கிறது, புதிய ஒழுங்குமுறை வந்து கொண்டிருக்கிறது (changing global order and the emergence of multipolarity.).” என்பதையும் அறிவுறுத்தியிருக்கிறார்.

இதன் மூலம்:

1, பாரத எல்லையில் சீனா இன்னும் சில்மிஷம் செய்வதை நிறுத்த வேண்டும்.

2, பாரதத்தை அடிமையைப் போல நடத்துவதை நிறுத்தி, mutual respect, mutual interest and mutual sensitivityயை கருத்தில் கொள்ள வேண்டும். (இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்).

3, அதோடு, ‘changing global order and the emergence of multipolarity’ பற்றிக் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. காரணம்: இன்றைய தேதியில், அமெரிக்கா சொல்வதை எவரும் கேட்பதில்லை. காலம் மாறிவிட்டது. இன்னமும் அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு சீனா ஆட்டம் போடலாம் என்று நினைத்தால், பல்பு தான் கிடைக்கும் சீனாவுக்கு. சீனா ஆதிக்கம் செலுத்திய ஆப்பிரிக்காவை குளோபல் சவுத் என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக மோதி ஜி அமர்ந்து விட்டார். அதோடு, ஜி20இல் அந்த ஆப்பிரிக்காவையும் சேர்த்து அதை பெருமைப் படுத்தியிருக்கிறார். மேலும், பிரேசில் ரஷ்யா இந்தியா சீனா தென் ஆப்பிரிக்கா என்றிருந்த பிரிக்ஸ் அமைப்பில் மேலும் பல நாடுகளைச் சேர்த்து – குறிப்பாக ஆப்பிரிக்கவைச் சேர்த்து – இப்போது பிரிக்ஸுக்கு புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார் மோதி ஜி: “Building Resilience and Innovation for Cooperation and Sustainability”. இனி அது Brasil Russia India China South Africa கிடையாது. !! இதையெல்லாம் குறிப்பிடும் விதமாக டாக்டர் ஜெய்ஷங்கர் changing global order and the emergence of multipolarity’ என்று குறிபிட்டிருக்கிறார்.

*** இத்தனையையும் குறிப்பிட்ட அவர், பஹல்காம் தாக்குதல் & ஆப் சிந்தூர் விவகாரத்தில் பாக்ஸ்டானை பின்னிருந்து இயக்கியது சீனா தான் என்பதைக் கூறவில்லை. அதை பின்னொரு நாளுக்கு வைத்திருப்பாரோ???

*** ‘விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்’ என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார் டாக்டர் ஜெய்ஷங்கர். சீனா திருந்துமா? வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

*** அமெரிக்காவுக்கு எதிராக தண்டத்தை கையிலெடுத்து விட்டார் மோதி ஜி, ‘நீ அடித்தால் பதிலுக்கு நான் அடிப்பேன்’ என்று! அதே நிலை சீனாவுக்கு என்று வருமோ தெரியாது.

பேரம் பேசுவதில் கெட்டிக்காரர்

வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் சிரித்த முகத்துடன் சொல்கிறார், “அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை நல்ல முறையில் போய்க் கொண்டிருக்கிறது. இரு தரப்புக்கும் லாபமான வகையில் அந்த ஒப்பந்தம் அமையும்” என்று.

வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் மீது ஏற்கனவே கடுப்பாக இருக்கிறது அமெரிக்கா, “டாக்டர் ஜெய்ஷங்கர் தான் பாரதத்துக்கு எதிராக வெள்ளைக்காரர்கள் போடும் முட்டுக் கட்டைகளை உடைத்தெறிகிறார்” என்று.

இப்போது வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மீது அதிக கடுப்பில் இருக்கிறது டிரம்ப் அட்மின், “ரொம்ப tough negotiator இந்த கோயல். கொஞ்சமும் இடம் கொடுக்க மாட்டேனென்கிறார் எங்களுக்கு” என்று.

பாரத அமெரிக்க வர்த்த பேச்சுவார்த்தைகளில் பிரச்சினை எங்கே வருகிறது என்றால் ‘அமெரிக்க விவசாய பொருட்களில்’. அத்தனையும் genetically modified! அமெரிக்கா உற்பத்தி செய்யும் சோளத்தை அமெரிக்க கால்நடைகள் கூட உண்ண மறுக்கின்றன என செய்திகள் உலவுகின்றன. அந்த சோளத்தை நம்மிடம் விற்கப் பார்க்கிறது அமெரிக்கா. நம்மிடம் மட்டுமல்லாமல் ஜப்பான், ஐரோப்பா என அத்தனை நாடுகளிடம் முயற்சித்து வருகிறது டிரம்ப் அட்மின். என்றாலும், அத்தனை பேரும் ஒதுக்கி விட்டார்கள் அமெரிக்க விவசாய உற்பத்தியை.

டிரம்ப்புக்கு – ரிபப்ளிகன்களுக்கு – இது கடுப்பை ஏற்றியிருக்கிறது. காரணம்: அமெரிக்க விவசாயிகள் தான் ரிபப்ளிகன்களின் வாக்குவங்கி! அவர்களுக்கு சாதகமாக அவர்கள் உற்பத்தியை ஏற்றுமதி செய்யாவிட்டால், அந்நாட்டு விவசாயிகளுக்கு நட்டம்! எப்படியாவது அவற்றை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று துடிக்கிறது டிரம்ப் அட்மின்.

கோயல் அணி, ‘genetically modified விதைகளையோ, விவசாய உற்பத்திகளையோ ஏற்க மாட்டோம்’ என்று ஒரேயடியாகப் போட்டிருக்கிறது. அவனிடமிருந்து genetically modified விதைகளை வாங்கினால், நம் விதைகள் அழிவதோடு, ஆயுள் பூராவும் அவனிடமே விதைகளுக்கு கையேந்த வேண்டும்…

தன் வாக்குவங்கியை திருப்திப் படுத்த டிரம்ப் அட்மின் உருண்டு புரண்டு கொண்டிருக்கிறது. இதில் இன்னொரு வேடிக்கை – சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுக்க முடிவெடுத்திருக்கிறது டிரம்ப் கூட்டம். ஏனென்றால், அந்த சட்டவிரோத குடியேறிகள் தான் அமெரிக்க விவசாயிகளிடம் வேலை பார்க்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் களத்தில் இறங்கி வேலை பார்ப்பதில்லை. எனவே, அவர்களை திருப்பி அனுப்பிவிட்டால் விவசாயிகள் நிலை கவலைக்கிடமாகிவிடும். எனவே… சட்ட விரோத குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுக்க முயற்சி நடந்து வருகிறது.

இதே டிரம்ப் தேர்தல் பரப்புரையின் போது, ‘சட்ட விரோத குடியேறிகளால் நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது. அவர்களைத் திருப்பி அனுப்புவேன்’ என்றார். இப்போது அவரே, ‘சட்டவிரோத குடியேறிகள் தான் எங்கள் விவசாயிகளின் நண்பர்கள். அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கப் போகிறேன்’ என்று கிளம்பியிருக்கிறார். கழுவின கையாலேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் டிரம்ப்!

டியர் டிரம்ப், ‘டாக்டர் ஜெய்ஷங்கரும் பியூஷ் கோயலும் மோதி ஜி உத்தரவில்லாமல் தன்னிச்சையாக இயங்குகிறார்கள்’ என்று நீங்கள் நினைத்தால், உங்களைப் போல முட்டாள் உலகில் இல்லை!

Delhi: On being asked about India–US trade negotiations, Union Minister of Commerce and Industry Piyush Goyal says, “Negotiations are going on at a very fast pace and in the spirit of mutual cooperation so that we can come out with a win-win trade complementing agreement with the United States.”

தவிக்க விடும் அமெரிக்கா தனிமைப்படுகிறதா?

modi and trump - 2026
#image_title-
  • முரு. தெய்வசிகாமணி

இந்திய அமெரிக்க டாரிஃப் சம்பந்தப்பட்ட பேச்சுக்கள் நடைபெற்றுவருகிறது. அது நீண்டுகொண்டே செல்கிறது. சீனாவிற்கு 50% வரி விதித்து கடைசியில் 10% வரிக்கு ஒத்துக்கொண்டது அமெரிக்கா.

காரணம் 50% வரி விதித்தால் அமெரிக்காவில் பல அன்றாட அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது சீனா, கடுமையான வரி விதித்தால் அந்த விலை உயர்வு பொருட்களில் விலை அதிகரித்து அது இன்ஃப்ளேஷனில் போய் அமெரிக்கர்களுக்கு பெரும் சுமையாக முடியும், அது அமெரிகாவிற்கும் பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்..

அதுபோல இந்தியாவிற்கும் வரியை குறைத்துதான் ஆக வேண்டும். ஆனால் இந்தியாவிடம் இருந்து வாங்கும் பொருட்கள் சீனப்பொருட்கள் அளவிற்கு நேரடியாக அன்றாட வாழ்வின் விலை உயர்வுக்கு காரணமாகாது என்பதால் சீனாவின் வரியை விட அதிகமாக இருக்கவே வாய்ப்புண்டு.

குறிப்பாக மருந்து பொருட்கள், மற்றும் IT Related Services என்பது மிக முக்கியமானது. அமெரிக்காவின் வரி விதிப்பில் இவை இரண்டும் தவிர்க்கப்படலாம் என்றால் மற்றவைகளுக்கு வரியை உயர்த்த வாய்ப்புகள் உண்டு

அது சீனாவின் வரியை விட அதிகமாக இருக்கலாம். அதற்கு காரணம் என்ன? கொஞ்சம் வரலாறு தேவை!?

சீனா ஆரம்பத்தில் கம்யூனிஷ்ட் நாடாகவும், ரஷ்யாவின் தோழராகவும் இருந்தது. பின்பு அது ரஷ்ய எதிர்ப்பு நிலை காரணமாக அமெரிக்க நண்பரானது. அதன் பின்னர் அமெரிக்காவின் பல உதவிகள் சீனாவின் பொருளாதாரத்தை பெருமளவில் உயர்த்தியது. அதே சமயம் ஜப்பானின் ஆதிக்கத்தை குறைக்க சீனா உதவியது.

சீனாவின் பொருளாதாரம் புதிய, பெரிய உயரம் தொட்டபின்னர் அதற்கு வல்லரசு ஆகும் ஆசை வந்தது, அதனால் ஜிங்பின் வந்த பின்னர், அதற்கான முன்னெடுப்புகளால் அமெரிகாவிற்கு எதிராக கம்பி கட்ட, அதற்கு ரஷ்யாவின் ஆதரவு தேவைப்பட்டது. அதன் விளைவாக சீனா ரஷ்யாவின் தோழராகி, மீண்டும் அமெரிக்காவின் எதிரியாக மாறியது.

சீனாவின் சார்பு நிலை கோவிட் சமயத்தில் பெரிய தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதும், அதன் வல்லரசு கனவுக்கு முடிவுகட்ட அதன் சார்பை குறைக்க இந்தியா உற்பட மாற்று நாடுகளில் உற்பதேதி, மற்றும் இறக்குமதியை அமெரிக்கா அதிகரித்தது.

அதே சமயம் சீனாவின் ராணுவ வலிமையால் அதை சமன் செய்ய இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது. அதனால் இந்தியாவிடம் நெருங்கிய அமெரிக்கா பல சலுகைகளை கொடுத்தது. மேலும் சீனாவுடன் ஒரு போரை இந்தியா மீதி திணிக்க அமெரிக்க செய்த முயற்சித்தது.

காரணம் சீன நவீன ஆயுதங்கள் இதுவரை போரில் பயன்படுத்தாதால் அதுபற்றிய ஒரு மதிப்பீட்டிற்குகும், இரண்டு நாடுகளும் அடுத்த வல்லரசுக்கான பொட்டென்ஷியல் இருப்பதால், இந்திய-சீனப்போர் இரு நாடுகளின் பொருளாதாரற்றை வீழ்த்திவிடும் என்பதால் அதற்கான வல்லரசு போட்டி கனவாவிவிடும் என்ற அமெரிக்க கனவு பலிக்கவில்லை.

இந்த நிலையில் இந்தியாவின் ரஷ்ய ஆதரவு என்பது சீனாவின் ஆதரவை விட அதற்கு போரில் பாதிக்கப்பட்ட அதன் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கிறது என்பதால் இப்பொழுது இந்தியாவின் மீது அதன் கோபம் திரும்பியது. ஆனாலும் சீனாவின் நெருக்கடியால் இந்தியாவை சார்ந்திருக்க வேண்டுய சூழல் தொடர்ந்தது.

இந்த நிலையில் இந்திய – பாகிஸ்தானின் 88 மணி நேர போரில், பாகிஸ்தான் என்பது கருவியே, அதில் பயன்படுத்தப்பட்ட 81% ஆயுதங்கள் சீனாவின் ஆயுதங்களே. அமெரிகக போல சீனாவும் இந்தியாவிடம் நேரடியாக் போர் செய்யாமால் அனைத்து ஆயுத உதவிகளை செய்து பாகிஸ்தான் மூலம் இந்தியாவிடன் போர் செய்தது.

சீனாவின் சேட்டிலைட் இமேஜ் முதல், ஹை-ஸ்பீட் நெட்வொர்க் மூலம் சீனா பாகிஸ்தானுக்காக தென்மேற்கு எல்லையில், இந்தியாவுடன் போர் செய்தது. அதனுடன் துருக்கியும் சேர்ந்து செய்த போர் எல்லாவற்றையும் இந்தியா தவிடுபொடி ஆக்கிவிட்டது.

அதன் பின்னால் அமெரிக்காவும் பாகிஸ்தானுக்கு வேறு விதமாக உதவி வந்த நிலையில், நூர்ஹானில் அமெரிக்காவின் பாதுகாப்பில் இருந்த அணு ஆயுதங்களை இந்தியா தாக்கியதால் பாகிஸ்தான் சரணடைய வேண்டிவந்தது.

இதில் சீனாவின் ஆயுதங்கள் மீண்டும் தரமில்லாதவை என்று நிரூபிக்கப்பட்டதால், அதன் பிரஸிடெண்ட் ஜிங்பின் தலைமை ஆட்டம் கண்டுவிட்டது. ஜிண்டா அவர் இடத்திற்கு முன்னேறியதால் இப்போது சீனா, தனது பெரிய பொருளாதார வீழ்ச்சியை தற்காத்துக்கொள்ள மீண்டும் அமெரிக்க சார்பு நிலையை நோக்கி நகர்கிறது.

அதன் விளைவாகவே சீனா மீதான வரி விதிப்புகள் 10% ஆக குறைந்துவிட்டது. அதாவது சீனா மீண்டும் அமெரிக்காவின் நட்பு நாடாகிவிட்டதா என்றால், அமெரிக்காவிற்கு அப்போதைய தேவைக்கு ( Need basis) யார் உதவுகிறார்களோ அவர்கள் நண்பர்கள், அது முடிந்ததும் டீலும் முடிந்துவிடும்.

ஐரோப்பிய யூனியனும், நேட்டோ நாடுஜளும் அப்பட்டிப்பட்ட தேவையை அடிப்படையாக கொண்டவையே. இருந்தாலும் அமெரிக்காவின் சுய நலம் என்று வரும்போது யாரையும் பலிகொடுக்க அமெரிக்கா தயங்காது.

இந்த நிலையில் ட்ரம்பின் இந்தியாவில் முதலீட்டை செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கைகளை ஆப்பிள் நிறுவனமோ, மற்ற சில நிறுவனங்கள் கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விற்பனையை தொடங்கி, அதன் உற்பத்தியை தொடங்கும் வாய்ப்புண்டு. அது ட்ரம், எலன் ம்ஃஸ்க் அவர்களுக்கி இடையே உள்ள சண்டையில் யார் பெரியவர் என்ற யுத்தத்தில், ட்ரம்பை வீழ்த்த எலன் மஸ்க் எதிர் திசையில் பயணிக்கலாம்.

ட்ரம்பின் வினேச கால விபரீத புத்தி என்பது அமெரிக்க தொழில்களின் நீண்டகால திட்டமிடலுக்கு எதிராக இருப்பதாலும், BRICS மூலம் அதன் வல்லரசு ஆளுமை வீழ்வதாலும், அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்களுக்கு, தொழில் செய்ய இந்தியா உகந்த நாடாக இப்போது பார்க்கப்படுகிறது. அதன் விளைவிளைவாக அவை இந்தியாவில் உற்பத்தியை ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக இந்தியாவின் தேஜஸ் விமானத்தின் டிமாண்டை அதிகரிப்பதை கட்டுப்படுத்த. GE நிறுவனத்தின் எஞ்சின் ஏற்றுமதியை நிறுத்தியது பைடன் அரசு. அது ட்ரம்ப் ஆட்சியில் மாறும் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்ததால், அதன் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதனால் தேஜஸ் விமானங்களை வாங்க முன்வந்த நாடுகள் பின்வாங்கியது.

அது G& E க்கும் நீண்ட்கால விற்பனை ஒப்பந்தத்தை பாழாக்கியதால் அதன் எதிர்காலம் அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் கை நழுவுகிறது. முன்பு தேஜசின் எல்லா விமானங்களுக்கும் எஞ்சின் தர செய்த ஒப்பந்தம் சரி வராததால், இப்போது இந்தியா தனது போர் விமான உற்பத்திக்கு மாற்று எஞ்சின்களை பார்க்க துவங்கிவிட்டது.

இந்தியா 850 போயிங் விமான ஆர்டரை கொடுத்துள்ளது. அதில் இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஒப்பந்தம் டாடாவுடன் இணைந்து செய்ய திட்டமிடல்கள் உள்ளது. தற்போது ஏர் இந்தியா விமான விபத்து ஏற்கனவே நலிந்த நிலையில் இருக்கும் போயிங்கை மேலும் பலவீனப்படுதியதால், அதை மறைக்க அமெரிக்கா பைலட் மீது தவறு என்று திசைதிருப்ப முயற்சிக்கிறது, அதை இந்தியா ஏற்கவில்லை. அது தவறு என்று நிரூபிக்கப்பட்டால் போயிங்கின் எதிர்காலம் மேலும் கவலைக்குரியதாகிவிடும்.

இந்த நிலையில் அமெரிக்காவின் ஆயுத வலிமை கூட கேள்விக்குரியாகி வருகிறது. அதன் மிகப்பெரிய பாதுகாப்பு, பாகிஸ்தானில் அதன் அணு ஆயுதங்களை இந்தியாவிடம் இருந்து பாதுகாக்க முடியவில்லை என்றால், அதன்ப்ளாகசிஃப் F-16 ஐ இந்தியா அடித்து நொறுக்கியதால் அதன் புதிய ஆர்டர்கள் பெருமளவில் சரிந்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் எந்த நாடுகள் BRICS ல் சேர்ந்தாலும் 500% வரி விதிப்போம் என்ற எச்சரிக்கையை மீறி 5 நாடுகள் BRICS ல் சேர்ந்துள்ளது. இப்பொழுது மேலும் 10 பார்ட்னர்கள் சேர்ந்து அமெரிகாவின் சட்டாம்பிள்ளைத்தனத்தை கண்டுகொள்ளவில்லை.

அதில் அமெரிக்காவின் மிக முக்கிய பார்ட்னரான மெக்ஸிகோவும் உண்டு என்பது அமெரிக்க ஆதிக்கம் முடிவுக்கு வருவதையே காட்டுகிறது! அதன் விளைவாக அமெரிக்க டாலரின் ஆதிக்கம் வேகமாக வீழ்ச்சியை சந்திக்கும் நேரம் வந்துள்ளது.

இப்படி பல விஷயங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவி போவதால், அமெரிக்கா தற்போது சீனாவை மீண்டும் நண்பனாக்கி, இந்தியாவின் மீது வ்ரி விதிப்பு மூலம் அதன் வளர்ச்சியை தடுக்க நினைக்கும். அது உடனே நடக்காவிட்டாலும், அடுத்தடுத்த புதிய காரணங்களை காட்டி இந்தியா மீது மரி விதிக்கக்கூடும்.

ஆனால் அதன் வரி விதிப்புகள் இந்தியாவிற்கு தற்காலிக தொய்வுகளை கொடுத்தாலும், நீண்டகால நோக்கில் அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சினையாகலாம். பல அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படும், அவற்றில் சில எதிர்கால வல்லரசு மற்றும் மிக முக்கிய சந்தை என்ற எதிர்பார்ப்பில் இந்தியாவிற்கு அதன் தொழிற்சாலைகளை நகர்த்தலாம் இல்லாவிஇல் அங்கேயே போயிங் போல வீழலாம்.

அதற்கு மிக முக்கிய காரணம் ட்ரம்பாகவும் இருக்க வாய்ப்புகள் கண்முன்னே தெரிகிறது. தேர்தலுக்கு முன்பு இருந்த அவரின் நிலைப்பாடுகள் அவரின் அவசர புத்தியாலும், டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவாலும் மீண்டும் குழப்பத்தில் நிறுத்தி, அமெரிக்க பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியைக்கூட கொடுக்க வாய்ப்புண்டு.

குறிப்பாக இந்தியர்களுக்கு விசா மற்றும், குடியுரிமை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு நிலையில்லாத போக்கை ஏற்படுத்தி வருவதால், இந்தியர்களின் அமெரிக்க முதலீடுகள் வெகுவாக குறைய வாய்ப்புண்டு.

குறிப்பாக சமீபத்தில் போட்டிருக்கும் வெளிநாட்டவர்கள் மீது போடப்பட்ட புதிய வரிவிதிப்பால், இந்தியர்கள் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது. அதன் முதல் பாதிப்பு ரியல் முதலீடுகளை நம்மவர்கள் குறைப்பதால் எஸ்டேட்டை பெரியளவில் பாதிக்கலாம்.

இதில் இன்னொரு சிக்கல், சீனா நீண்டகால நோக்கில் BRICS இருந்து விலகி தற்காலிக சர்வைவலுக்கு மீண்டும் அமெரிக்காவிடம் செல்வதால் அதற்கு மேலும் சிக்கல்கள் எழக்கூடும்.

இந்த பார்வையில் பல Its & buts இருக்கிறது. அமெரிக்காவிடம் பல இயற்கை வளங்கள் இருந்தாலும், அதன் எதேச்சிகார போக்கால், அது தனிமைப்படுவதை உணர்கிறோம். அதற்கு மாறாக ஐரோப்பிய நாடுகள் உற்பட பல நாடுகளுடன் இந்தியா செய்து வரும் ஒப்பந்தம், இந்தியாவின் தற்காலிக வீழ்ச்சையை குறைக்கவும், அமெரிக்காவின் வீழ்ச்சியை துரிதப்படுத்தவும் செய்யலாம்.

எனவே உலகில் மூன்றாம் உலகப்போருக்கான ஆயுதப்போரைவிட பொருளாதார போர் பெருமளசில் உலக நாடுகளை பாதிகும்.

ஏற்கனவே AI போன்ற வளர்ச்சியால் பாதிக்கப்ப IT துறை பெருமளவில் வேலை வேய்ப்பு இழப்புகளை சந்திக்க நேரிடும். அவை நிறுவனங்களுக்கு இழப்பை கொடுக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் வேலை வாய்ப்புகள் சரிவை சந்திக்கும்.

அவற்றை சமன் செய்ய, அவர்களை எப்படி இந்தியா சாதிக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி!