
பள்ளிகளில் பாலியல் கல்வி தேவையில்லை என ஆர்எஸ்எஸ்.இயக்கத்தின் அங்கமான சிக்ஷா சான்ஸ்க்ரிதி உத்தன் நியாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் உயர்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு பாலியல் கல்வி வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாலியல் அது்துமீறல் என்றால் என்ன? பெண்களை மதிப்பது எப்படி? பெண்கள் தற்காப்பு, குடும்பக் கட்டுபாடு, பால்வினை நோய்களைத் தடுப்பது எப்படி? உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு குறித்த கல்வியை அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அங்கமான சிக்ஷா சன்ஸ்க்ரிதி உத்தன் நியாஸ்அமைப்பின் செயலா் அதுல்கோத்தாரி செய்தியாளா்களுக்கு அளித்த போட்டியில் ‘புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை பரிந்துரைத்துள்ளபடி பள்ளிகளில் பாலியல் கல்வியை கட்டாயமாக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை, பாலுறவு என்ற வார்த்தையை பள்ளிகளில் பயன்படுத்துவதையே வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
வேண்டுமென்றால் தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்க பள்ளிகளில் ஆலோசனை மையம் வேண்டுமானால் அமைக்கலாம்,
பள்ளி மாணவர்கள் மனித உடலைப்புப் பற்றித் தெரிந்து கொள்வதே அவசியம்,
அது ஏற்கனவே அறிவியல் பாடம் மூலம் புகட்டப்படுகிறது. இந்நிலையில் பாலியல் கல்வி என்று ஒன்று தனியாகத் தேவையில்லை.
இதுவரை பாலியல் கல்வி எங்கெல்லாம் அமல்படுத்தப்பட்டதோ அங்கெல்லாம் அது எதிர்வினையையே ஏற்படுத்தியிருக்கிறது.
கல்வியில் இந்தியத் தன்மை இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அவரின் இந்த கருத்து பல்வேறு விவாதங்களைக் கிளப்பி உள்ளது.



