
ஆந்திரா மாநிலம் துனி என்னும் பகுதியை சேர்ந்தவர் 70 வயதான அப்பலா சுப்ரமணியம்.
சில வருடங்களுக்கு முன்பு கோவில் குருக்களாக பணியாற்றிவந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டதால் இவருக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டது. எனவே இவர் குருக்கள் பணிக்கு செல்வதில்லை.

அதன்பின்னர் இவரது மகனும் இவரை கைவிட்டுவிட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டார். இந்நிலையில் கவனிக்க யாரும் இன்றி சுப்ரமணியம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக இவர் வெளியே வரவில்லை.

மேலும் அவரது வீட்டில் அங்கங்கே சிறு சிறுபைகள் இருப்பதை கண்டனர். பொதுமக்கள் அதில் என்ன இருக்கிறது என்று பார்த்ததில் அணைத்து பைகளிலும் நாணயம், பணம் போன்றவை இருந்துள்ளது.
அந்த பணத்தை எண்ணி பார்த்ததில் ஏறக்குறைய 6 லட்சம் வரை பணம் இருந்துள்ளது. அதன்பின்னர் சுப்ரமணியம் இறந்தது குறித்து அவரது மகனுக்கு தகவல் கொடுத்து இறுதி காரியங்கள் நடைபெற்றுள்ளது. அந்த பணத்தை அந்த பகுதிக்கான நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்போவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்..