சவுதி அரசு முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்க முன்வந்துள்ள நிலையில், பொது இடத்தில் இறுக்கமாக உடை அணிந்தாலோ, அல்லது முத்தம் கொடுத்துக்கொண்டாலோ அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இது போன்ற உத்தரவுகள் வெளியாகியுள்ளது.
பணி நிமித்தமாக செல்வோர் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு மட்டுமே சவுதி அரசு விசா வழங்கி வந்தது. முதல் முறையாக, சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்க முன் வந்துள்ள, நிலையில், இந்த கட்டுப்பாடுகளையும் சேர்த்தே அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
சவுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு உள்ள சட்ட நடைமுறைகளை, அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் தங்கள் தோள்பட்டைகள் மற்றும் முட்டி உள்ளிட்ட பகுதிகளை மூடும் வகையில் ஆடை அணிந்திருக்க வேண்டும்.
ஆண்களோ அல்லது பெண்களோ யாராக இருந்தாலும் இறுக்கிப் பிடித்துக் கொள்ள கூடிய அளவுக்கான ஆடைகளை அணியக் கூடாது. மோசமான வார்த்தைகள் அல்லது படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணியக்கூடாது. இவ்வாறு 19 வகையான கட்டுப்பாடுகளை சவுதி அரசு விதித்துள்ளது.
அதே நேரம் இதை மீறினால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. சவுதி அரேபியாவில் சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை. அங்கு அது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். எனவே சுற்றுலா பயணிகள் வருகை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
ஆனால் 2030ஆம் ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணையால் கிடைக்கக்கூடிய வருவாய் பெருமளவு குறைந்துவிடும் என்பதால் சவுதி அரேபியா தனது சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்தி அதன்மூலம் வருவாய் ஈட்டும் திட்டத்தில் உள்ளது. இந்த நிலையில்தான் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.