வெள்ளை கொண்டைகடலை நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்\
.
2 ஆம் நாள்திங்கள்கிழமை-30-09-2019
நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)
தேவையான பொருட்கள் :
வெள்ளை கொண்டைகடலை : 1/4 Kg
உப்பு : தேவைகேற்ப
அரைப்பதற்கு :
தேங்காய் : 1/4 மூடி (துருவவும்)
பச்சை மிளகாய் : 3 Nos.
புதினா இலை : ஒரு கைப்பிடி அளவு-அல்லது கருவேப்பிலை.
இஞ்சி : 1 இன்ச் துண்டு
தாளிக்க:
எண்ணை : 2 டி ஸ்பூன்
கடுகு : 1/2 டி ஸ்பூன்
பெருங்காயப்பொடி : 1 டி ஸ்பூன்
செய்முறை :
– கடலையை 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
– பிறகு குக்கரில் கடலையை போட்டு, கடலை முங்கும் அளவு தண்ணீர் விட்டு 5 விசில் விட்டு இறக்கவும்.
– தேங்காய், ப.மிளகாய், இஞ்சி, புதினா எல்லாவற்றையும் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
– பிறகு ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கி கடலையை (நீரை வடித்து) சேர்த்து கிளறவும்.
– தேவை பட்டவர்கள் கருவேப்பிலை சேர்க்கலாம், இல்லாவிட்டால் புதினா மணத்துடன் சுண்டல் ரெடி



