சர்ச்சுகளில் பாலியல் தொல்லை… வெறுத்துப் போன கன்யாஸ்திரிகள்! வெளிநாடுகளில் தஞ்சம்!

Published:

nun lucy bishop mulakkal - 2026

கொச்சி: சர்ச்சுகளில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் குறித்து, தற்போது வெளிவயாகியுள்ள அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஓர் உண்மையைப் பேசுகிறது. சுமார் நூறு கன்னியாஸ்திரிகள் கேரளாவில் உள்ள சர்ச்சுகளை விட்டு வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர் என்பதே அது.

கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் முன்னாள் பாதிரிகள் கன்னியாஸ்திரிகளின் சங்கம் நடத்திய ஆய்வில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சுகளை விட்டு வெளியேறும் பாதிரியார்களின் எண்ணிக்கையும் அந்த அளவுக்கு சற்றும் குறைவாக இல்லை. சங்கத் தலைவர் ரெஜி என்ஜெல்லானி கூறுகையில், சுமார் நூறு பாதிரியார்கள் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். சிஸ்டர் லூசி கலாப்புரா தனது சுயசரிதையில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பேசியுள்ளார். பாலியல் பலாத்கார சம்பவங்களின் பின்னணி குறித்தும் அவர் பேசியுள்ளார்

nun lucy - 2026

“சர்ச்சுகளை விட்டு வெளியேறியவர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் வகையில் ஓபன் சர்ச் மூவ்மெண்ட் – என, திறந்தநிலை சர்ச் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த சங்கம் 2015 இல் உருவாக்கப்பட்டது. பின்னர் முன்னாள் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் சம்பந்தப்பட்ட பல வழக்குகளை நாங்கள் கண்டோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை தாக்குதல்கள் உள்ளிட்ட பாலியல் தாக்குதல்களுக்கு உள்ளானவர்கள்.

அவர்கள் புனித தடுப்பு அரண்களையும் , சம்பவங்களில் இருந்து தப்பித்து ஓடி ஒளிந்து கொண்டசர்ச்சுகளையும் கண்டித்தனர், அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளுக்குச் சென்றனர். சர்ச்சுகளில் பல மர்மமான மரணங்கள் நடந்தாலும், அவை வெளிச்சத்திற்கு வரவில்லை.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

பெரும்பாலான பிரச்னைகள் சர்ச்சுகளின் செல்வ வளத்தின் பின்னணியிலிருந்து எழுகின்றன. அதனால்தான் சர்ச் சட்டத்தை அமல்படுத்த இந்த சங்கம் முயன்றுள்ளது.

சர்ச் பழக்கவழக்கங்கள் தொடர்பான எந்த அசௌகரியத்தையும் விசுவாசிகள் எதிர்கொள்ளக்கூடாது. சர்ச்சுகளை வந்தடையும் செல்வம், நிதி குறித்து சரியாக கணக்கிட வேண்டும்.

Santhome Basilica Chennai - 2026
ID:7318843

சிஸ்டர் லூசி கலாப்புராவின் சுயசரிதை வெளியானதைத் தொடர்ந்து, அவர் சமூக ஊடகங்கள் மூலம் கேரக்டர் அசாஷினேஷன் என்ற வகையில், தன் அடையாள பாத்திர படுகொலைகளைச் சந்தித்துவிட்டார்.

அவர் கூறிய உண்மைகள் முன்னாள் பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் சங்கத்திற்கு எழுதிய கடிதங்களில் கூறப்பட்டதைப் போன்றவையே. பெரும்பாலான விவகாரங்களில் வெறும் எழுத்துக்கள் மட்டுமே ஏட்டளவில் இருக்கின்றன, சர்ச்சுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ”

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img