புது தில்லி:
திகார் சிறையில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்துப் பேசிய எம்.நடராஜன் அவருக்கு அளித்த முக்கிய வாக்குறுதியால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலக்கத்தில் உள்ளாராம்.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனை சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, இருவரும் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளனர் என்று தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வட்டா
ரம் தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
முன்னர் ஓ.பன்னீர்செல்வம், அடுத்து எடப்பாடி பழனிச்சாமி என்று, சசிகலா குடும்ப வட்டாரத்தால் தமிழகத்தில் நிலையற்ற ஆட்சி நிலவுவதாக பொதுமக்களிடையே வலுவான கருத்து நிலவுகிறது.



