
ஊரடங்கு முடியும் வரையில் மதுக்கடைகள் திறக்கப்படாது என TASMAC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TASMAC டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்ட செய்திக்குறிப்பில்
சென்னை உயர்நீதிமன்றம் மே 8 இன்று உத்தரவிட்ட படி அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் ஊரடங்கு உத்தரவு முடியும் காலம் வரை மூடுவதாக அறிவித்துள்ளது, எனவே மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் அனைவரும் டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனை கடைகளை அடுத்த உத்தரவு வரும் வரையில் மூடியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

அதேபோல் அனைத்து மாவட்ட மேலாளர்கள் அனைத்து கடைகளிலும் ஷட்டர்கள் சரியாக மூடப்பட்டு இருக்கிறதா சீல் வைக்கப்பட்டதா பாதுகாப்பு சரியாக இருக்கிறதா என்று எந்தவிதமான திருட்டு சம்பவத்துக்கும் காரணம் இல்லாத வகையில் பாதுகாப்புடன் உள்ளதா என்று உறுதிப்படுத்த வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.
மேலும் டாஸ்மாக் கடைகளில் இருந்து சட்டவிரோதமாக வெளியில் மதுபானம் விற்கப்படுவதை விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எந்தவிதமான பிரச்சினைகளும் வரக்கூடாது என்ற வகையில் பாதுகாப்புடன் இருக்குமாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது!
டாஸ்மாக் மதுபான விற்பனை முதல் நாளில் ரூ.172 கோடி என்றும், இரண்டாவது நாளில் ரூ.125 கோடி என்றும் தகவல்கள் வெளியாகின. எனவே இரு நாட்களில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை ஆன நிலையில், உயர் நீதிமன்றம் மது விற்பனைக்கு திடீர் தடை போட்டிருக்கிறது. இதை ஒட்டி டாஸ்மாக் நிறுவனமும் கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்த இரண்டு நாள் கூத்துக்காகத்தான் எத்தனை போலீஸார் தங்கள் மற்ற பணிகளை எல்லாம் விட்டுவிட்டு டாஸ்மாக் கடைகள் முன் வேலை செய்தார்கள் என்று சலிப்பான கருத்துகளும் வரத் தொடங்கின.