
திருமலை பக்தர்களுக்கு இனிப்புச் செய்தி.
ஶ்ரீவாரி மகா பிரசாதம் அனைவருக்கும் கிடைக்கப் போகிறது.
அண்மையில் திருமலா திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஒரு நல் வார்த்தை கூறியுள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து பக்தர்களுக்கு ஸ்ரீவாரி பிரசாதம்.
புகழ்பெற்ற புண்ணிய ஷேத்திரம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு இனிப்பு செய்தி அளித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் நடந்துவரும் லாக்டௌன் பின்னணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூட பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் விரைவிலேயே தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டது.
அதோடு புதிதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு நல்வார்த்தையும் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் பக்தர்களுக்கு மகா பிரசாதம் கொடுக்க தீர்மானித்திருப்பதாக அறிவித்துள்ளது.
பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது பற்றி டிடிடி ஒருவழியாக தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் மட்டுமே உள் செல்ல முடியும் என்று திட்டம் வகுத்துள்ளது.
முதல் மூன்று நாட்கள் திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகளுக்கு தரிசன பாக்கியம் கொடுக்கப் போகிறார்கள். அதன்பின் திருமலை திருப்பதியில் உள்ள உள்ளூர் வாசிகளை அனுமதிக்கப் போவதாக திதிதே அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இந்த வரிசையில் ஸ்ரீவாரி நைவேத்தியமாக படைக்கப்படும் லட்டுவோடு கூட ஸ்ரீவாரி வடை பிரசாதத்தையும் கூட விற்பனைக்கு வைக்கப் போகிறார்கள். இதன்படி திருமலையில் உள்ள டிடிடி பிரதான பரிபாலனம் பவனத்தில் ஸ்ரீவாரி கல்யாண உற்சவ லட்டுகளை விற்பனைக்கு வைப்பார்கள். அது மட்டுமல்ல. இனிமேல் எப்படிப்பட்ட ஷரத்துகளுமில்லாமல் பக்தர்கள் கேட்ட அளவுக்கு லட்டுகளும் வடைகளும் கிடைக்கும்படி டிடிடி ஏற்பாடு செய்துள்ளது.
50 நாட்களுக்குப் பிறகு லட்டு பிரசாதம் கிடைக்கப் போகிறது என்பதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
ஆயின் லாக்டௌன் மீது அரசாங்க உத்தரவு வரும் வரை திருமலை கோவிலுக்கு பக்தர்களுக்கு நுழைவு இருக்காது என்று அறிவித்துள்ள டிடிடி, சுவாமியின் மகா பிரசாதத்தை மட்டும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வது பற்றி பலரும் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.



