
திருமலை மீது சிலுவைக்குறி… அவ்வாறு கூறுவது மிகப் பெரும் சதி… அதிர்ச்சி அளித்த திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி ஆலயம் தொடர்பான ஒரு ஃபேஸ்புக் போஸ்ட் குறித்து டிடிடி ஆடிஷனல் ஈஓ ஆத்திரமடைந்தார்.
திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்வாமியின் புண்ணிய க்ஷேத்திரத்தின் மீது அண்மைக் காலத்தில் பல புகார்கள், பொய் பிரச்சாரங்கள் வைரலாகி வருகின்றன.
புதிதாக ஒரு புனிதமான வடிவத்தை இயேசுகிறிஸ்துவின் சிலுவையாக மார்ஃபிங் செய்து வைரல் செய்துள்ளார்கள்.
இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் இந்த விவகாரம் இது திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் ஆத்திரமடைந்தனர். ஆலயத்தின் மீது விஷமப் பிரச்சாரம் செய்வதால் ஆலயத்தின் புனிதத்திற்கு கேடு விளைகிறது. புனிதத் தன்மையைக் கெடுப்பதற்கு சிலர் சதி செய்கிறார்கள் என்று டிடிடி அடிஷனல் ஈஓ தர்மா ரெட்டி கடுமையாக ஆத்திரத்தைக் வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து திங்களன்று திருமலை ஸ்ரீவாரி ஆலயம் முன்பு அவர் மீடியாவோடு பேசுகையில் ஹிந்து தர்ம பிரச்சாரத்திற்கு டிடிடி பல பத்தாண்டுகளாக செய்து வரும் முயற்சி பக்தர்கள் அனைவருக்கும் தெரியும். திருமலை ஸ்ரீவாரி ஆலய பிராகாரத்தின் மீது பூர்ணகும்ப வடிவத்தில் உள்ள மின்சார அலங்காரத்தை சிலுவையாக மார்பிங் செய்து தாளபத்ர நிதி என்ற ஃபேஸ்புக்கோடு கூட இன்னும் சிலரும் வாட்ஸ்அப், சோஷல் மீடியாவில் தவறான பிரச்சாரம் செய்தார்கள் என்று விவரித்தார்.

ஸ்ரீவாரி உற்சவங்கள் நடக்கும்போது ஹனுமான், கருடன், பூரணகும்பம் போன்ற அலங்காரங்கள் செய்வது சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. புனிதமான கலசத்தை சிலுவையாக மார்பிங் செய்து சதித்திட்டம் தீட்டி தீய பிரச்சாரம் செய்தார்கள் என்று அவர் கூறினார். இது பக்தர்களின் மனநிலையைப் பாதிக்கும் படி இருக்கிறது என்றும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு கவலையும் வருத்தமும் தருகிறது என்றும் கூறினார்.
இந்த போஸ்ட் பதிவு வு செய்த தாளபத்ரநிதி என்ற பேஸ்புக் யூ ஆர் எல் மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தர்மா ரெட்டி கூறினார்.
இந்துக்கள் புனிதமான வழிபடும் தெய்வமான ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸ்வாமி கொலுவீற்றிருக்கும் திருமலை க்ஷேத்திரத்தின் மீது சிலர் இதே வேலையாக அடிக்கடி தீய பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று அவர் கவலை தெரிவித்தார். திருமலையின் மதிப்பை குறைக்கும் படி செய்பவர்களை இனிமேல் சும்மா விடமாட்டோம் என்றும் அப்படிப்பட்டவர்கள் மீது டிடிடி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் தர்மாரெட்டி மீடியாவிடமும் பக்தர்களிடமும் அந்தக் கலசவடிவிலுள்ள மின்சார அலங்காரத்தை காண்பித்தார்.
சீப் இஞ்சினியர் ரமேஷ் ரெட்டி, எஸ் ஈ நாகேஸ்வரராவ், கோவில் டெப்யூடி ஈஓ ஸ்ரீஹரீந்தரநாத், ஆலய ஓஎஸ்டி பாலசேஷாத்ரி ஆகியோர் நிருபர்களின் கூட்டத்தில் பங்கு பெற்றார்கள்.
ஸ்ரீவாரி ஆலய பிரகாரம் மீது ஏற்பாடு செய்த பூரண கும்பத்தில் புஷ்பம் போல மின்சார அலங்காரம் செய்துள்ளார்கள் என்றும் அது சிலுவை அல்லவென்றும் பல பக்தர்கள் பிரத்யக்ஷமாக பார்த்து தெளிவுபடுத்தினார்கள். பூரண கும்பத்தை மார்பிங் செய்து பக்தர்களின் மனநிலையை வருத்தமடையச் செய்தார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலையின் புனிதத்தன்மை மீது தீய பிரசாரம் செய்பவர்களை சும்மா விடக்கூடாது என்று பல பக்தர்கள் திதிதேவிடம் தெரிவித்தார்கள்.