
வரும் 31ஆம் தேதி முதல் நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கவுள்ளது. இதனை தன் டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்!
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான நீலகிரியில் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த ரயில் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய பதிவுகள் அண்மைக் காலத்தில் சமூகத் தளங்களில் பகிரப் பட்டன. இந்த ரயில் தனியார் மயமாக்கப் பட்டு விட்டதாகவும், அதன்படி இனி ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தப் பட வேண்டும் என்றும், இனி ஏழைகளுக்கு எட்டாக் கனவு ஆகிவிடும் என்றும் ஊடகங்களிலும் தகவல்கள் பரப்பப் பட்டன.
ஆனால் இதற்கு ரயில்வே நிர்வாகம் இது தவறான தகவல், வதந்தி என்று விளக்கம் அளித்தது.
