
தற்போது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஒரு பெண் பள்ளிக்குச் செல்கிறாள். அவள் வளர்ப்பு ஆட்டுக்குட்டியும் துள்ளியபடியே பின் செல்கிறது. இந்த வீடியோ பார்ப்பவர்கள் மத்தியில் பேரானந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இணையத்தில் வைரலாகும் குறுகிய கிளிப்பில், சிறுமி ஒருவர் ஒரு அழகிய மலைப் பகுதியில் சந்து வழிகளில் சுற்றி பள்ளிக்கு செல்வது போல் உள்ளது.
அவள் பள்ளி சீருடை அணிந்திருந்தாள் மற்றும் தனது கூந்தலை பள்ளிக்கு செல்லும் நோக்கில் அழகாக கட்டியிருந்தாள்.
வீடியோவில் இணையவாசிகளை மகிழ்வுற வைத்துள்ளது ஆடு தான். “பள்ளிக்குச் செல்லும் இரண்டு நண்பர்கள்,” என வீடியோவின் தலைப்பில் பதிவிட்டுள்ளனர்.
Two friends going to school in #HimachalPradesh ❤ pic.twitter.com/BzbhdouvHk
— Dr. Ajayita (@DoctorAjayita) September 20, 2021