
வழக்கம் போல், இன்றும் திமுக., தலைவர் மு.க. ஸ்டாலினை வெச்சி செய்து வருகின்றனர் சமூக ஊடகவாசிகள்.
அண்ணாதுரைக்காக மூன்று கி.மீ தூரம் நடந்தே சென்று தேநீர், பக்கோடா வாங்கிக் கொடுத்தவன் நான் — சுடாலினார்.
இதிலிருந்து_அறிவதாவது . . .
- அண்ணாதுரை இருந்த போது 3 கி.மீ. தூரம் செல்ல காரோ, இரு சக்கர வாகனமோ இல்லாத அளவுக்கு சுடாலினார் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்திருக்கிறது.
சந்தேகம்.
இவ்வளவு ஏழ்மையில் இருந்த குடும்பம் அண்ணாதுரை மறைவுக்கு பின்னர் ஆசியாவின் பெரும் பணக்காரராக மாறியது எவ்வாறு??
- அண்ணாதுரை காலத்தில் 3 கி.மீ. தூரம் நடந்து செல்லும் நேரம் வரை ஆறாத டீ, டீக்கடைகளில் போடப்பட்டிருந்துள்ளது.
- அன்றைக்கே கறுநானிதி க்கு தெரிந்திருக்கிறது, “இவர் ஓடிப் போய் டீ, பக்கோடா வாங்கிவரும் அல்லக்கை வேலைக்குதான் லாயக்கு” என்று.
இது, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்த இன்றைய சமூக வலைத்தள கிண்டல்கள்.
இதற்குக் காரணம், ஸ்டாலின் தாமே பகிர்ந்து கொண்ட மலரும் நினைவுகள்தான்! ”அண்ணாதுரைக்கு பக்கோடா வாங்கி வர ஒரு ரூபாய் கொடுப்பார். அதில் நான் எட்டணாவை திருடிக் கொள்வேன்” என அவர் கூறியது இப்போது சமூகத்தளங்களில் பரவலாக விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியை ஊர் ஊராகச் சென்று நடத்தி வருகிறார். அதில், திமுக., காரர்கள், அவர்களால் ஏற்பாடு செய்யப் பட்டு கூட்டத்துக்கு அழைத்து வரப் படும் மக்களிடம் குறைகளைக் கேட்டு, எழுதி வாங்கிக் கொண்டு, அதைப் படித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்டாலின் பேசியபோது… “ஒவ்வொரு தனி மனிதனும் அதிமுக., அரசால் அடைந்த துன்பங்களை திமுக., ஆட்சி அமைந்ததும் துடைக்கும். உங்கள் பிரச்னைகள் அனைத்தும் இங்குள்ள பெட்டியில் போட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதன் சாவி என்னிடம் தான் இருக்கப் போகிறது. திமுக., ஆட்சி பொறுப்பேற்றதும் இதற்கென தனிப்பிரிவு அமைக்கப்படும். மனுக்களில் குறிப்பிடப் பட்டுள்ள அடிப்படைப் பிரச்னைகள் அனைத்துக்கும் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைப்பேன்…” என்றார்.
தொடர்ந்து ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “முதல்வராக இருந்த அண்ணாதுரையின் மணி விழாவை கோபாலபுரத்தில் நடத்த திட்டமிட்டு அவரை சந்தித்து தேதி வாங்கச் சென்ற என்னை அங்கிருந்த அப்போதைய அமைச்சர்கள் அண்ணாதுரைக்கு உடல் நலம் சரியில்லை இப்போது யாரையும் பார்க்க மாட்டார் எனக் கூறி திருப்பி அனுப்பினர். வீடு திரும்பிய நான் உணவு உண்ணும்போது அண்ணாதுரையே என் வீட்டிற்கு காரை அனுப்பி வைத்தார். பின் அவரை சந்தித்து மணி விழாவிற்கு தேதி கேட்டேன். பிறகு தருவதாகக் கூறினார்.
நான் இப்போதே தேதி தர வேண்டும் என்றேன். நீ உன் தந்தையை போலவே உறுதியாக இருக்கிறாய் என்று என்னிடம் கூறினார். அண்ணாதுரைக்கு ராயப்பேட்டை அமீர் கடை பக்கோடா என்றால் பிடிக்கும்! அதை வாங்கி வர ஒரு ரூபாய் கொடுப்பார். அதில் நான் எட்டணாவை திருடிக் கொள்வேன்… என்று பேசினார்.
அவரது பேச்சு இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அண்ணாதுரை காலத்திலேயே கமிஷன் அடித்தும், திருடிக் கொண்டும் ஆட்டையப் போட்ட ஸ்டாலின், தன் வாயாலேயே தான் திருடன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்து வருகின்றனர். #100நாள்நாடகம் என்ற ஹேஷ்டேக் இப்போது பிரபலமாகி வருகிறது.