மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியல்! எந்தெந்த நகரங்களுக்கு எந்த இடம்?

citys 1 - 2026

நாட்டில் வாழ்வதற்கு ஏற்ற 111 நகரங்கள் மற்றும் 111 சிறந்த நகராட்சி நிர்வாகங்கள் குறித்த பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான நகரங்கள் மற்றும் மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவான நகரங்கள் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான 49 நகரங்களும், மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள 62 நகரங்களும் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதேபோல, சிறந்த நகராட்சி நிர்வாகத்தில் மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான 51 நகராட்சி நிர்வாகங்களும், மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவான 60 நகராட்சி நிர்வாகங்களும் கணக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, போக்குவரத்து வசதி, பொழுது போக்கு, பாதுகாப்பு, பொருளாதார மேம்பாட்டு நிலை, பொருளாதார வாய்ப்புகள், சுற்றுச்சூழல், எரிசக்தி பயன்பாடு, பச்சை மண்டலம், கட்டிடங்கள், நகரின் வளர்ச்சி, குடிமக்கள் பார்வை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

இந்தப் பட்டியலில் மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான நகரங்களில் தேசிய அளவில் பெங்களூரு முதலிடத்தையும், சென்னை 4-வது இடத்தையும், கோவை 7-வது இடத்தையும், மதுரை 22-வது இடத்தையும் பிடித்துள்ளன.

மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள நகரங்கள் பட்டியலில் சிம்லா முதலிடத்தையும், சேலம், வேலூர் ஆகியவை முறையே 5, 6-வது இடங்களையும், திருச்சி 10-வது இடத்தையும், திருநெல்வேலி 17, திருப்பூர் 18, ஈரோடு 24-வது இடங்களையும் பிடித்துள்ளன.

கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி, துப்புரவு, பதிவு, அனுமதி, உட்கட்டமைப்பு ஆகிய சேவைகள், நிதியில் வருவாய்- செலவின மேலாண்மை, நிதி பரவ லாக்கல், மின்னணு ஆளுமை- பயன்பாடு- மின்னணு குறித்த கல்வியறிவு, திட்டங்கள் தயாரிப்பு- நடைமுறைப்படுத்துதல்- கட்டாயமாக்குதல், நிர்வாகத்தில் திறன்- வெளிப்படைத்தன்மை- கடமை, மனிதவளம், பங்கேற்பு உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் சிறந்த நகராட்சி நிர்வாகங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், மக்கள்தொகை 10 லட்சத்துக்கு அதிகமான நகரங்களில் இந்தூர் முதலிடத்தையும், கோவை 12-வது இடத்தையும், சென்னை 18-வது இடத்தையும், மதுரை 22-வது இடத்தையும் பெற்றுள்ளன.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

மக்கள்தொகை 10 லட்சத்துக்கு குறைவாக உள்ள நகரங்களில் சேலம் 5-வது இடத்தையும், திருநெல்வேலி 10-வது இடத்தையும், ஈரோடு 13-வது இடத்தையும், வேலூர் 14-வது இடத்தையும், திருச்சி 17-வது இடத்தையும், தூத்துக்குடி 20-வது இடத்தையும் பெற்றுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories