December 6, 2025, 3:56 PM
29.4 C
Chennai

இளைஞருக்கு கோடிக்கணக்கில் சம்பாதிக்க அடித்த அதிர்ஷ்டம்… எல்லாம் இந்த மூலிகைதான் காரணம்!

sunil pawar1
sunil pawar1

சீந்தில் மூலிகைக் கொடிகளால் ஒரு மலைவாழ் இளைஞனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்.

சீந்தில் கொடி பற்றி நகரத்தில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் கிராம மக்களுக்கு தினமும் கண்ணில் படக்கூடிய தாவரம் சீந்தில் மூலிகைக் கொடி. நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதற்கு இந்த மூலிகை கொடி பயன்படுகிறது. சயின்ஸ்படியும் இந்த விஷயம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பின்னணியில் பலரும் வேலை இழந்து உள்ளார்கள். இந்த நேரத்தில் சீந்தில் கொடி மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு காண்ட்ராக்டர் வியாபாரத்தில் முன் செல்கிறார் ஒரு மலைவாசி இளைஞர்.

andhra herbal 1
herbal 1

மகாராஷ்டிராவில் உள்ள தானேவைச் சேர்ந்த சுனில் பவார் என்ற இளைஞர் சீந்தில் கொடியை வியாபாரிகளுக்கு எடுத்துச் செல்வதற்கு புகழ்பெற்ற ஒரு நிறுவனத்திடம் ஒன்றரை கோடி ரூபாய்க்கு அக்ரிமெண்ட் செய்து கொண்டுள்ளார். அது மட்டுமல்ல. தன்னுடைய வியாபாரம் மூலம் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார்.

ஷாஹ்பூர் தாலுகாவிலுள்ள கரீத் என்ற இடத்தைச் சேர்ந்த சுனிலுக்கு உள்ளூர் காடுகளில் கிடைக்கும் மூலிகை மருத்துவ குணம் உள்ள செடிகளை பற்றி பெரியவர்கள் மூலம் நல்ல புரிதல் உள்ளது.

andhra herbal2
herbal2

இம்யூனிடி பவரை அதிகரிப்பதில் சீந்தில் கொடி மிகவும் உபயோகப்படும் என்று அவர் அறிந்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதனைச் சேகரித்து கம்பெனிகளுக்கு அளிக்கும் வியாபாரத்தை தொடங்கினார். அதில் ஒரு பாகமாக கட்கரி என்ற மலைவாழ் இனத்தவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து பிரதமரின் வன்தன் திட்டத்தின் உதவியோடு வன்தன் நிலையங்களை அமைத்தார். அப்போது ஆண்டுக்கு மூன்று முதல் 5 லட்சம் வரை சம்பாதித்தார்.

andhra herbal3
herbal3

கொரோனா தொற்றுநோய் காரணமாக சீந்தில் மூலிகைக்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளது. அதனால் டாபர், பைத்யநாத், ஹிமாலயா போன்ற நிறுவனங்களுக்கு 350 டன் சீந்தில்கொடி வழங்குவதற்கு அவர் 1.57 கோடி ரூபாய்க்கு காண்ட்ராக்ட் பெற்றுள்ளார். தற்போது சொந்த ஊரிலேயே சுனிலுக்கு ஐந்து வன்தன் நிலையங்கள் உள்ளன.

ஆயுர்வேதத்தில் சீந்தில் கொடியை மிக அதிகளவில் பயன்படுத்துவர். ஹைபர்டென்ஷன், ஆஸ்துமா, ஜுரம், டயாபட்டிஸ், இதயம் தொடர்பான நோய்களை குணப்படுத்துவதில் இது முக்கிய பணியாற்றுகிறது. முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சீந்தில் கொடியின் உபயோகம் மிக அதிகம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories