December 6, 2025, 5:11 AM
24.9 C
Chennai

கொரோனாவால் இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம்! : அமைச்சர் பதில் என்ன? தெரியுமா

dmk stalin - 2025

திமுக., எதிர்க்கட்சியாக இருந்த போது, கடந்த வருடம் கொரோனா முதல் அலையின் போதே, கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. இப்போது வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், திமுக., அரசு அவ்வாறு ஒரு கோடி ரூபாய் வழங்குவது சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறது.

கொரோனா தொற்றால் இறந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது சாத்தியமில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெளிவுபடக் கூறியிருக்கிறார்.

கொரோனா தோற்றால் இறந்த அனைவரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்குவது சாத்தியமில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். சட்டசபையில் அரக்கோணம் அதிமுக எம்எல்ஏ ரவி பேசியபோது… கொரோனா தொற்றால் இறப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா பரிசோதனை முடிவுகளை விரைவில் வழங்க வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாட்டால் மையங்களுக்குச் சென்று பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்… என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் 172 இடங்களில் தொற்றை கண்டறியும் ஆய்வு மையங்கள் உள்ளன0 இங்கு மே 21 வரை பரிசோதனை மாதிரிகள் அதிகம் வந்ததால் முடிவுகள் அறிவிப்பு தாமதம் ஆனது உண்மைதான். ஆனால் கடந்த 15 நாட்களாக பரிசோதனை செய்த 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன

தொற்றால் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது சாத்தியமில்லாதது. எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மட்டும் நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் நிவாரணம் வழங்கப்பட்டது. இதை தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்திற்கு இதுவரை 1.29 கோடி தடுப்பூசி பெறப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது தடுப்பூசியை முறையாக செலுத்தியதால், அதைப் பாராட்டி கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது என்றார்.

அரசின் கணக்குப் படி, ஜூன்22ம் தேதி வரையிலான குறிப்பில், 31,580 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஸ்டாலின் பதவி ஏற்ற மே 7ம் தேதி வரை 15,171 கொரோனா மரணங்கள் பதிவாகியிருந்தன. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரோனாவால் இறந்தவர் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைப் படி பார்த்தால், இப்போது 32 ஆயிரம் கோடி ரூபாய் வரை வழங்கப் பட வேண்டும். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலால், தமிழக அரசுக்கு ரூ.32 ஆயிரத்து கோடி சொச்சம் மிச்சமாகியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories