
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட் போன்களில் உள்ள புகைப்படங்களை கடவுச் சொல்லுடன் பாதுகாக்கும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட செல்போன்களில் உள்ள பயனர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், தொடர்புகள், விடியோக்கள் உள்ளிட்டவைகளின் தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியான நிலையில் தான் உள்ளது.
இந்நிலையில் பயனர்களின் புகைப்படங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய பாதுகாப்பு அம்சங்களை கூகுள் போட்டோஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி கூகுள் போட்டோஸில் உள்ள புகைப்படங்களை யாரும் அணுகமுடியாதவண்ணம் கடவுச்சொல்லின் மூலம் பயனர்கள் பாதுகாக்க முடியும்.
கூகுள் பிக்சல் செல்போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியானது விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு செல்போன்களிலும் பயன்பாட்டுக்கு வரும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட கோப்பை கடவுச் சொல்லின் மூலம் பாதுகாக்கக்கூடிய இந்த வசதியில் பாதுகாக்கப்பட்ட கோப்புகளை செயலிகள் அணுக முடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.