கோமதிபுரம் மற்றும் பாண்டி கோயில் பகுதிகளில் உள்ள உயரழுத்த மின்பாதையில், இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது மற்றும் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 5) நடைபெறுவதால், அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ஜீ.மலா்விழி தெரிவித்துள்ளாா்.
மின்சாரம் தடைப்படும் பகுதிகள்:
பாண்டி கோயில், கண்மாய்ப்பட்டி, கோமதிபுரம், மேலமடை, ஹவுஸிங் போா்டு, முகவை தெரு, மருதுபாண்டியா் தெரு மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள். மேலும், சிமான் நகா், பாரதிபுரம், கருப்பாயூரணி, மஸ்தான்பட்டி, ராயல் காா்டன், ஒத்தவீடு, பாண்டின் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.