ஒவ்வொரு நாளும் பல வினோதமான, வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
இதில் விலங்குகளின் வீடியோக்களுக்கு நெட்டிசன்களிடையே தனி ஆர்வம் உள்ளது.
ஜங்கிள் சஃபாரி சமயத்தில் பல விலங்குகள் மற்றும் பறவைகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் காண்பது என்பது மிகவும் இயல்பான ஒன்று தான்.
ஆனால், அதுவே மக்கள் பயன்படுத்தும் பொது இடங்களில் வனவிலங்குகளைப் பார்த்தால் அது மிகவும் வினோதமான நிகழ்வாக அமைந்துவிடும்.
அப்படி பொது இடங்களில் வனவிலங்குகளைப் பார்ப்பதே அரிதான நிகழ்வாகக் காணப்படும் போது, சமீபத்தில் ஒரு பொது கழிப்பறையிலிருந்து சிங்கம் வெளிவந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
பொது கழிப்பறையில் இருந்து வெளிவந்த காட்டின் ராஜா
பொதுமக்கள் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்ட பொது கழிப்பறையில் இருந்து காட்டின் ராஜா வெளியில் வரும் காட்சியை ஒரு பெண் தனது ஸ்மார்ட்போனில் படம்பிடித்துள்ளார்.
இவர் படம் பிடித்த இந்த வீடியோ இணையதளத்தில் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. பொது கழிப்பறையில் இருந்து சிங்கம் வெளியேறுவதை யாரும் யூகித்துக் கூட பார்த்திருக்க முடியாது.
காட்டிற்குள் சுற்றுலா பயணிகள் சஃபாரி ரைட் சென்ற போது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. காட்டிற்குள் சஃபாரி ரைட் செய்ய வரும் சுற்றுலாப் பயணிகளை திடீர் என்று இயற்கை அழைத்தால், அவர்கள் வசதிக்காகக் காட்டிற்குள் கட்டப்பட்ட ஒரு பொது கழிவறை தான் இந்த வீடியோ பதிவில் காட்டப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பொது கழிவறைக்கு யாரும் எதிர்பார்த்திடாத விருந்தாளியாகக் காட்டின் ராஜாவே வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காட்டிற்குள் இருக்கும் பொதுக் கழிப்பறைக்கு இந்த சிங்கம் எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால், பொது கழிவறைக்குள் சிங்கம் இருப்பதை ஒரு பெண் சுற்றுலாப் பயணி கவனித்துள்ளார்.
இதனால் அவர் உடனடியாக அவரின் ஸ்மார்ட்போனை எடுத்து வீடியோ ரெக்கார்டிங் செய்யத் துவங்கியுள்ளார். நகரும் காரில் இருந்து எடுக்கப்பட்ட காட்சியை வீடியோ பதிவு தெளிவாகக் காட்டுகிறது.
அந்த பெண் அமர்ந்திருக்கும் கார், பொது கழிவறையை நெருங்கும்போது, சிங்கம் கம்பீரமாகக் கதவை விட்டு வெளியே வருவதை நீங்கள் வீடியோவில் காணலாம். வீடியோவின் பின்னணியில், பலர் ஆச்சரியமாகப் பேசுவதும் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ சமூக ஊடக பயனர்களை அதிர்ச்சியடையச் செய்ததோடு மகிழ்விக்கவும் செய்துள்ளது.
ஒரு நிமிடத்திற்கு செல்லும் இந்த காணொளியில் ‘ஆண் கழிப்பறை’ என்று எழுதப்பட்டிருக்கும் பச்சை பலகை கொண்ட ஒரு பொது கழிப்பறையிலிருந்து சிங்கம் வெளியே வருகிறது. பின்னால் மக்கள் பேசிக்கொண்டு இருப்பது கேட்கிறது.
மக்கள் தங்கள் சஃபாரி வண்டியில் ஏற தயாராகிறார்கள். அப்போது திடீரென கழிப்பறையிலிருந்து ஒரு சிங்கம் வெளி வருகிறது. இதைக் கண்ட மக்களை அச்சம் பற்றிக்கொள்கிறது.
அந்த சிங்கம், சில நொடிகள் நின்று சுற்றும் முற்றும் பார்க்கிறது. பின்னர், தன் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்து, அருகில் உள்ள ஒரு காட்டை நோக்கி நகர்கிறது.
இந்த வீடியோ, WildLense Eco Foundation என்ற ட்விட்டர் ஹேண்டில் மூலம் பகிரப்பட்டது. இந்த அமைப்பு இந்தியாவில் வனவிலங்குகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் செயல்படும் ஒரு அமைப்பாகும். “கழிப்பறைகள் எப்போதும் பாதுகாப்பான இடங்களாக இருக்கும் என சொல்ல முடியாது. இந்த இடங்களை சில நேரம் பிறரும் பயன்படுத்தலாம்” என இந்த ட்வீட்டில் எழுதப்பட்டுள்ளது.
அநேகமாக அவர்கள் எல்லாம் இந்த நிகழ்வை சஃபாரி காருக்குள் இருந்தபடி கண்டுள்ளனர் என்பது தெரிகிறது. இந்த வீடியோவை பதிவு செய்த பெண் அதை நகைச்சுவை கலந்த கேப்ஷன் உடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“லூ எப்போதும் மனிதர்களுக்குப் பாதுகாப்பானது அல்ல, சில சமயங்களில் மற்றவர்களும் இதைப் பயன்படுத்தலாம்” என்று அவரின் கேப்ஷன் குறிப்பிடுகிறது. இந்த வீடியோவை இதுவரை 17.6K நெட்டிசன்கள் பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோவை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர் மற்றும் ரீட்வீட் செய்துள்ளனர்.
ஒரு பொது கழிப்பறையில் ஒரு அசாதாரண விலங்கு தோன்றியதைப் பார்த்து பலர் ஆச்சரியப்பட்டாலும், மற்றவர்கள் வேறு சில கருத்தையும் பதிவிட்டுள்ளனர்.
சில பயனர்கள் இந்த அசாதாரண சம்பவத்தைப் பார்த்து சிரித்தனர், மற்றவர்கள் சிங்கத்தின் நடத்தையால் ஈர்க்கப்பட்டனர்.
இதைப் பார்த்து பயந்த சிலர், இனி ஜங்கிள் சஃபாரி செய்யும்போது, பொது கழிப்பறையை பயன்படுத்த மாட்டோம் என்று கூறினர்.
“கழிப்பறை கட்டப்பட்ட நிலம் ஒரு காலத்தில் சிங்கங்களின் குளியலறையின் இடமாக இருந்தது. அதை மனிதர்கள் கைப்பற்றினார்கள். மனிதர்கள் அதை நன்றாக பராமரிக்கிறார்களா இல்லையா என்பதைச் சரிபார்க்க சிங்கம் சென்றது” என்று ஒரு பயனர் வேடிக்கையாக எழுதியுள்ளார்.
“மேக் இன் இந்தியா பிராண்ட் அம்பாசிடர், தூய்மை இந்தியா திட்டத்தின் செயல்பாடுகளை சரிபார்க்க திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார்” என மற்றொரு பயனர் கருத்து தெர்வித்துள்ளார்.
இந்த அமைப்பால் டேக் செய்யப்பட்ட சுசந்தா நந்தா, ஐஎஃப்எஸ், சிங்கம் அநேகமாக தனது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க முயற்சிப்பதாக நகைச்சுவையாக கூறினார்.
Loo is not always safe & reliver for humans, sometime it can be used by others too…@susantananda3 @ParveenKaswan @PraveenIFShere @Saket_Badola pic.twitter.com/MNs9pwCycC
— WildLense® Eco Foundation 🇮🇳 (@WildLense_India) October 2, 2021