தற்போது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை (life certificate) அந்தந்த வங்கி கிளைகளில் சமர்ப்பித்து வருகின்றனர்.
இதன் மூலம் தங்களின் மாத ஓய்வூதியத்தை அவர்கள் எடுத்து கொள்கின்றனர். அதன்படி அனைத்து ஓய்வூதியதாரர்களும் இந்த ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை (life certificate) வரும் நவம்பர் 30-க்குள் சமர்பிக்க வேண்டும்.
தங்கள் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிக்க இதற்கு முன்பு வரை அந்தந்த வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
ஆனால் இந்த மாதம் முதல், பொதுத்துறை வங்கிகள் வழங்கும் டோர் ஸ்டெப் பேங்கிங் சேவையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து சமர்ப்பிக்க முடியும்.
இந்தியன் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, மத்திய வங்கி, இந்தியா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, யூகோ வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகிய வங்கிகள் இந்த டோர் ஸ்டெப் சேவையை வழங்குகின்றன.
இதன் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து தங்கள் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க முடியும்.