அழகான விலங்குகளில் வீடியோக்களை பார்ப்பது யாருக்கு தான் பிடிக்காது. நாய்க்குட்டிகள் விளையாடுதல், பூனைக்குட்டிகள் செய்யும் சேட்டைகள் மற்றும் குட்டி யானைகளின் அட்டகாசங்கள் போன்ற அழகான வீடியோக்கள்.
அவை அனைத்தும் இதயத்தை லேசாக்கி உங்களை சிரிக்க வைக்கின்றன. இந்த விலங்கு வீடியோக்களை பார்ப்பதால், நமக்கு சந்தோஷம் வருவதோடு, இது மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
அந்த வகையில் இரண்டு யானைகள் பரஸ்பரம் முத்தமிடுவது போன்ற ஒரு வீடியோ மக்களை மிகவும் நெகிழச் செய்துள்ளது.
ஆம், இந்த குட்டி யானைகள் பரஸ்பரம் எப்படி முத்தமிடும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதை அறிந்து கொள்ள உங்களுக்கு ஆர்வமாக இருந்தால், இந்த வீடியோவை பாருங்கள்.
19 விநாடிகள் கொண்ட காணொளியில் இரண்டு யானைகள் பரஸ்பரம் தங்கள் அன்பை வெளிப்படுத்த நெருங்கி வந்து முத்தமிடுகின்றன.
அவற்றின் தும்பிக்கைகளின் முனைகள் மனித விரல் நுனியை விட அதிக உணர்திறன் கொண்டவை. தும்பிக்கையில் 1,00,000 வெவ்வேறு தசைகள் உள்ளன.
விலங்குகள் பரஸ்பரம் உணர்வு பூர்வமாக தொடர்புகொள்வதில், தும்பிக்கைகளை முக்கிய பங்கு வகிக்கின்றன.
கென்யாவை தளமாகக் கொண்ட ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை (Sheldrick Wildlife Trust), “அனாதைகளான குட்டி யானைகளை மீட்பது, மறுவாழ்வு அளித்தல்” ஆகியவற்றிற்காக செயல்படுகிறது.
இந்த அறக்கட்டளை இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. “யானை முத்தங்கள்” என்று அந்த வீடியோவுக்கு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழகான வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது. இதற்கு பலர் மிகவு ரசித்ததுடன், பல விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஒரு பயனர், “நான் வாழ்க்கையில் பார்த்த மிக இனிமையான விஷயம்” என்று பதிவு செய்துள்ளார். மற்றொருவர், “எனக்காக சில தும்பிக்கை முத்தங்களை மிச்சம் வைக்கவும்.”
Elephant kisses 🐘 pic.twitter.com/9SeHzYW80e
— Sheldrick Wildlife (@SheldrickTrust) October 3, 2021