சென்னை தி. நகர் வெங்கட் நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் இருந்து வாரம்தோறும் கொடுக்கப்படும் லட்டு இங்குள்ள கவுண்டர்களில் விற்பனை செய்யப்படுகிறது இதனை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் பெருமாள் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக தற்போது இங்கு 2022-ம் ஆண்டுக்கான ஆங்கில காலண்டர் விற்பனை தொடங்கியுள்ளது.
திருமலை திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் புதிய தயாரிப்பான இந்த காலண்டரை பெற விரும்பும் பக்தர்கள் தி. நகர் வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அலுவலக கவுண்டரில் பெற்றுக்கொள்ளலாம்.
தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் காலண்டர்களை பக்தர்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை www.ttdseva.in, www.tirumala.org என்ற இணையதள முகவரியில் பக்தர்கள் பெறலாம் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.