
வண்டி வாகனங்களில் எப்போதும் இளைஞர்கள் சிலர் சாகசங்கள் செய்து விளையாடுவது வழக்கம். அந்த சாகசங்கள் சரியாக முடிந்தால் அதில் எந்தவித சிக்கலும் இருக்காது
அதுவே அதில் ஏதாவது தவறுகள் நடந்தால் அது மிகவும் விபரீதமாக முடியும். அந்தவகையில் ஒருவர் செய்த பைக் சாகசம் இறுதியில் விபரீதமாக முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், ஒருவர் வேகமாக பைக்கில் ஸ்டெண்ட் செய்வது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்பின்னர் அவர் பைக்கின் ஒரு வீலை தூக்கி வீலிங் செய்கிறார். அதைத் தொடர்ந்து கீழே போடும் போது அவருடைய பைக் தடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதியது.
அதில் அவர் பைக்கில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். அவர் ஒரு சில காலங்களில் உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ஐபிஎஸ் அதிகாரி, இதுபோன்ற பைக் ஸ்டெண்டை யாரும் செய்யக் கூடாது. பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்தப் பதிவை பார்த்த பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் அந்த நபரை பொது சாலையில் இதுபோன்ற பைக் ஸ்டெண்ட்களை செய்வது தவறு என்று தெரிவித்து வருகின்றனர்.
#BeSafe💐
— Rupin Sharma IPS (@rupin1992) October 27, 2021
ऐसा मत करना😢😢😢😢
Hero की Heropanti nikal gayi 😢😢😢@ipskabra @arunbothra @ipsvijrk pic.twitter.com/fHZ2mo7Rgb