சைபர் பாதுகாப்பு தளமான அவாஸ்ட் ஆண்ட்ராய்டு போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய 151 செயலிகள் மூலம் மோசடி நடப்பதை கண்டு பிடித்துள்ளது.
இந்த செயலிகள் ஒரு பெரிய எஸ்எம்எஸ் மோசடியின் ஒரு பகுதியாக உள்ளன. எனவே ஆண்ட்ராய்டு பயனாளிகள் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அவாஸ்ட் கூறியுள்ளது.
இதன் மூலம் பயனர்கள் மால்வேர் மற்றும் மோசடிகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முடியும். சுமார் 80.5 மில்லியன் மக்கள் இந்த மோசடி செயலிகளை 80க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இவை அனைத்து ஸ்மார்ட் போனுக்கு மிகவும் ஆபத்தானவை. இந்த செயல்கள் அனைத்தும் ஒரே மாதிரியை பின்பற்றுகின்றன. நிறுவிய பிறகு அவை ஸ்மார்ட்போனின் இருப்பிடத்தை கேட்கும், பின்னர் IMEI எண்ணை கேட்கும். இவற்றின் மூலம் உங்கள் பகுதி குறியீடு மற்றும் மொழி அடையாளம் காணப்படும்
இதையடுத்து பல்வேறு விதமான மோசடிகள் நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் பயனர்களை ஏமாற்றி பணம் வசூலிக்கப்படுகிறது.
Amaze translate, calls id unlocker, camera translator, chat translator for WhatsApp, Earth scanner, GT sports racing online, new vision camera உள்ளிட்ட பல செயலிகள் ஆபத்தை விளைவிக்கின்றன. எனவே இதுபோன்ற செய்திகளை உங்கள் போனில் இருந்து நீக்குவது நல்லது.