
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பல வித விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பாம்பையும் எலியையும் நாம் காண முடிகின்றது.
இதில் நடக்கும் ஒரு விஷயம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றது. அதோடு நமக்கு இதைக் கண்டவுடன் ஆச்சரியமும் ஏற்படுகின்றது.
சில நொடிகளே கொண்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு வெள்ளை வண்ண எலி, பயங்கரமான ஒரு பாம்பின் (Snake) முன், அதன் உணவாக வீசப்படுகின்றது. ஆனால், இதன் பின்னர் இந்த வீடியோவில் நடப்பதைப் பார்த்து நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
தன் முன்னால், தனக்கு உணவாக வந்த எலியை உண்ணாமல், பாம்பு அதனுடன் விளையாட ஆரம்பிக்கிறது.
சுண்டெலியும் பாம்பின் தலையில் அமர்ந்து விளையாடத் தொடங்கியதைக் காண முடிகின்றது. எலி சில சமயம் பாம்பின் வாலைப் பிடிப்பதையும், சில சமயம் கழுத்தில் தொங்குவதையும் காண வேடிகையாக உள்ளது. இதை பார்ப்பவர்கள் அனைவருக்கும் பலத்த சிரிப்புதான் வருகிறது.
வைரலாகும் இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் royal_pythons என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை லைக் செய்துள்ளனர்.