
வாட்ஸ்அப் வீடியோ காலில் ஆபாசமாகத் தோன்றி பணம் கேட்டு மிரட்டும் வடமாநில கும்பல் குறித்துசென்னை பெருநகர காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வினோத். இவரது முகநூல் மெசஞ்சரில் பெண் ஒருவர்’ஹாய்’ என மெசேஜ் அனுப்பியுள்ளார். பின்னர் அந்த பெண், தனது வாட்ஸ்அப் நம்பரைக் கொடுத்து உங்கள் வாட்ஸ் நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் என்னைப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
வீடியோ காலில் வினோத் அழைக்க, அடுத்த நொடி, அழகியவட இந்திய பெண் ஒருவர் வாட்ஸ் அப் வீடியோ காலில் ஆபாசமாக அரைகுறை ஆடையுடன் தோன்றியுள்ளார். அதை வினோத் பார்த்து கொண்டிருந்தபோது, அழகியின் வீடியோ கால் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
சில நிமிடங்கள் கடந்த நிலையில், அரைகுறை ஆடையுடன் நின்ற அந்த பெண்ணின் வீடியோவை வினோத் பார்த்துக் கொண்டிருப்பது போன்று ஸ்க்ரீன்சாட் போட்டோ, வினோத்தின் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து வினோத்திடம் பேசிய ஆண் ஒருவர், பெண்ணின் ஆபாச படத்தை ரசித்த தங்களின் சபலத்தை சமூகத்தில் அம்பலப்படுத்தட்டுமா…? என்று மிரட்டியும், சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று அச்சுறுத்தியும் வினோத்திடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பறித்துள்ளனர்.
மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீஸில் வினோத் புகார் அளித்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில், அது குஜராத்தைச் சேர்ந்தபெண் என்பதும், அரபித்தா குமாரி, அனாமிகா சர்மா என பலபெயர்களில் இந்த கும்பல் மோசடியை அரங்கேற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்டஒரு கும்பல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில நாட்கள் இதுபோன்ற மோசடி புகார்கள் வருவது குறைந்தது.
இந்நிலையில் இதே பாணியில் மோசடிசெய்வது தற்போது அதிகரித்துள்ளது. இந்த கும்பலின் பிடியில்சிக்கியவர்களில் சிலர் வெளியேசொல்கின்றனர், பலர் ‘பணம் போனால் போகட்டும் மானமாவது மிஞ்சியதே’ என்று பணத்தை கொடுத்துவிட்டு தவிக்கின்றனர்.
இந்தியா முழுவதும் இந்தநூதன மோசடி அரங்கேறி வருகிறது. சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களை குறிவைத்து நடக்கின்ற இந்த மோசடியில் சிக்காமல் எச்சரிக்கையுடன் இருங்கள் என சைபர் கிரைம் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.