
வெள்ள நிலவரத்தைப் பார்வையிடும் வகையில் போட்டோஷூட் நடத்தச் சென்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, வயலில் இறங்கி வெள்ளத்தைப் பார்வையிடுங்களேன் என்று ஒரு வயதானவர் கூறினார். அதற்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி… யோவ் போய்யா என்று புறங்கையைக் காட்டி வெறுப்புடன் கூறினார்.
அதற்கு அந்த முதியவர், நான் விவசாயிங்க… அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன் என்று புரியாமல் திருதிருவென முழிக்க… அவரை முறைத்துப் பார்த்தார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
இந்த வீடியோ இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதான் விடியலின் லட்சணம் என்ற கருத்துகளுடன் மகேஷ் பொய்யாமொழிக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.