ஜன்னியா?
இஞ்சி, வெள்ளைப்பூண்டு, கடுகு, முருங்கைப்பட்டை இவற்றைச் சம அளவு எடுத்து நன்றாக அரைத்துத் தலையின் உச்சியில் அழுத்தித் தேய்க்கவும். அதே கலவையைக் கால் பெருவிரலைச் சுற்றி பற்றுப் போட்டு அப்படியே கட்டி விடவும். சீக்கிரத்தில் சரியாகி விடும்.
திருநீற்றுப் பச்சரிசியை சாறெடுத்து அரை அவுன்ஸ் வீதம் உள்ளுக்குச் கொடுத்து வந்தால் கபம், மேல் சுவாசம், ஜன்னி, சயித்தியம் இவை குணமாகும்.
ஹிஸ்டீரியாவா?
நரம்பு பலவீளமான பெண்களுக்கு ஏற்படும் ஹிஸ்டீரியா என்னும் பேய் பிடித்தாடுவதாகக் கூறப்படும் நோய், இழுப்பு வாத நோய் முதலிய வற்றுக்கு பொன்னாவரை இலை. வேர். பூ முதலியவற்றை நாற்பது கிராம் வீதம் எடுத்து ஒரு விட்டர் நீர் விட்டு அரை விட்டராகக் காய்ச்சி வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்து வர நல்ல குணம் தெரியும் அஜீரண வாயு ரோகங்களுக்கு இது பயன்படும்.
மாம்பழத்தின் மகத்துவம்
மாம்பழத்தில் கார்போஹைட்ரேட் முதல் மாவுச்சத்துகள், புரதம், கொழுப்பு, சர்க்கரைப் பொருள். தாது உப்புகளுடன் சில அமிலங்களும் உள்ளன. மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’யும் ‘சி’யும் நிரம்ப உள்ளன. மாம்பழம் சாப்பிட்டுத் தவறாமல் இரவில் பால் குடிப்பது நல்லது. இரத்த விருத்தி வீரிய, விருத்தி எல்லாம் ஏற்படும். தோல் பளபளக்கும்.
வாழைப்பழ மகத்துவம்
வாழைப்பழத்தில் அயச்சத்து அதிகமிருக்கிறது. இரவு படுக்கைக்கு முன் ஒரு பழம் சாப்பிட்டு பால் குடிக்க வேண்டும். மூளை பலப்படு வதுடன் மலச்சிக்கலையும் நீக்கும். வாழைப்பழத்தில் கரும்புள்ளிகள் உள்ள பழங்களை சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
தயிரின் மகத்துவம்
தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிட அது மூளையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். எலும்புகளுக்கும் தேவையான கால்சியம் தயிரில் நிறைய இருக்கிறது. குளிப்பதற்கு முன் தலையில் தயிரைத் தடவிக் கொண்டு குளித்தால் பொடுகு மறையும்.
பேரிக்காயின் மகத்துவம்
ஜீரண உறுப்புகளான இரைப்பை, குடல் இவற்றுக்கு நல்ல பலத்தையும் இதயத்திற்கு வலுவையும் தரும். பேரிக்காய் சாப்பிட்டு வர நல்ல பசி ஏற்படும். கர்ப்பிணிகளுக்கும் பேரிக்காய் சாப்பிட பிறக்கும் குழந்தைக்கு பால் இல்லை என்ற பேச்சே இருக்காது. மூத்திரப்பையில் உள்ள கற்களும் கரைந்து விடும்.
மாங்கனியின் மகத்துவம்
மாங்காய் சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். வயிற்றுப் பூச்சிகள் போகும். தாது பலவீளமாக உள்ளவர்களுக்கு சக்தியைக் கொடுக்கும். புற்றுநோய் வராமலும் தடுக்கும்.