
உலகளவில் பிரபலமான செய்தியிடல் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இதில், பயனர்கள் மெசேஜ், வீடியோ மற்றும் ஆடியோ கால் உள்ளிட்ட பல சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்
இந்நிலையில் தற்போது பயனர்கள் ஒரு செயலி மூலம் ரயில் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற முடியும். இதற்காக, பயனர்கள் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சம்மந்தப்பட்ட ரயிலுடன் தொடர்புடைய நிகழ்நேர புதுப்பிப்பை பெறலாம்.
மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் பயனர்களுக்கு Railofy என்ற சேவையை வழங்குகிறது. Railofy மூலம், பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப்-ல் ரயில் தொடர்பான பல முக்கிய தகவல்களை பெற முடியும்.
இதில் PNR Status போன்ற ரயில் தொடர்பான தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இது தவிர, ரயில் எவ்வளவு தாமதமாக வருகிறது, அதன் தற்போதைய நிலையையும் தெரிந்து கொள்ளலாம்.

ரயிலின் நிகழ்நேர நிலையைப் பெற, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் தொடர்புகளில் + 91-9881193322 என்ற எண்ணைச் சேமிக்க வேண்டும்.
அதன் பிறகு, நீங்கள் பயணம் செய்ய விரும்பும் போதெல்லாம், இந்த எண்ணில் உங்களின் 10 இலக்க PNR எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும். PNR எண்ணை அனுப்பிய சிறிது நேரத்திலேயே, அந்த ரயில் தொடர்பான நிகழ்நேர புதுப்பிப்புகள் பயனர்களுக்கு கிடைக்கும்.
இந்த சேவையானது மக்களின் நேரத்தை சேமிக்க உதவுவதுடன், ரயிலின் நிகழ்நேர புதுப்பிப்புகளை எளிதாகப் பெறவும் உதவி செய்கிறது..
மேலும், நீங்கள் இறங்க வேண்டிய இடத்தின் முந்தைய ஸ்டேஷன் கடந்துவிட்டதா, அடுத்து வரப் போவது என்ன ஸ்டேஷன் என்பதும் தெரியும். மக்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் மட்டுமே இந்த தகவல்களை பெறுவார்கள்.
மேலும், பயனர்கள் இந்த சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்த விரும்பும் போதெல்லாம், அவர்கள் STOP என்று டைப் செய்து, அதே எண்ணுக்கு செய்தியை அனுப்ப வேண்டும், அதன் பிறகு தகவல்கள் வருவது நிறுத்தப்படும்.