
ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று கன்று குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள துப்பாக்குடி பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லலிதா என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதியினர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இவர்களது பசு ஒரே பிரசவத்தில் 3 கன்றுகளை ஈன்றது. இது குறித்து அறிந்த உடன் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பிறந்த 3 கன்று குட்டிகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இதுகுறித்து லலிதா கூறும்போது, சினைப்பருவத்தில் எங்கள் பசுமாட்டின் வயிறு சற்று பெரிதாக இருந்ததால் பெரிய அளவிலான கன்று குட்டியை ஈன்றெடுக்கும் என நினைத்தோம்.
ஆனால் பசு மாடு 3 கன்று குட்டிகளை ஈன்றது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார். இது குறித்து கால்நடை மருத்துவர் கூறும் போது, ஒரு பசுமாடு 3 கன்றுகளை ஈன்றது அரிதானது என தெரிவித்துள்ளார்.