
தங்கத்தில் முதலீடு செய்ய, விரும்புவோர் தங்க பத்திரசேமிப்பு திட்டத்தில் இணையலாம் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு வசதியாக தங்கப்பத்திர விற்பனையை ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து, அஞ்சல்துறை செயல்படுத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி வரை தங்க பத்திர விற்பனை செய்யப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் தங்க பத்திர விற்பனை வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,791, ஒருவர் ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை வாங்க முடியும். முதலீடு தொகைக்கான 2.5 சதவீத வட்டி, 6 மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டாளர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
ஐந்து ஆண்டுகள் முடிவடைந்த பிறகு முதலீட்டை திரும்பப் பெறலாம். 8 ஆண்டுகளுக்கு பிறகு முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான தொகை கிடைக்கும். இதன் மூலம் செய்கூலி, சேதாரமின்றி தங்கம் சேமிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிக்க பான் கார்டு அவசியம். ஆதார் அட்டை, அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சலகத்தில் கொடுத்து தங்க பத்திரத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அஞ்சல் துறை அறிவித்துள்ளது.