April 27, 2025, 1:25 PM
34.5 C
Chennai

Truecaller… வீடியோ காலர் ஐடி., உடன் புது அப்டேட்ஸ்!

இந்தியாவில் Truecaller ஆப் அதன் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வீடியோ காலர் ஐடி, கால் ரெக்கார்ட்டிங் மற்றும் பல அம்சங்களை வழங்குகிறது. Truecaller அதன் Truecaller பதிப்பு 12 அப்டேட்டின் ஒரு பகுதியாக புதிய அம்சங்களை வரிசையாக அறிவித்துள்ளது.

வீடியோ காலர் ஐடி, கால் ரெக்கார்ட் ஆப்ஷன், பயனர்களுக்கான புதிய இண்டர்ஃபேஸ் ஆகியவையும் இந்த புதிய அப்டேட்ஸில் அடங்கும். இந்த Truecaller அப்டேட்ஸை “Truecaller இன் ஆகச்சிறந்த பதிப்பு” என்று கூறியிருக்கிறது.

Truecaller வெர்சன் 12 அப்டேட்ஸின் ஒரு பகுதியாக மொத்தம் ஐந்து அம்சங்களை அறிவித்துள்ளது. இவற்றில் சில Truecaller இன் பிரீமியம் மெம்பர்களுக்கு மட்டுமே கிடைக்கும், மற்றவை Android இல் உள்ள அனைத்து Truecaller பயனர்களுக்கும் இலவசம்.

வரும் வாரங்களில், இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த அப்டேட் படிப்படியாக வெளிவரத் தொடங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், iOSக்கான கான்டாக்ட் அப்டேட்டை இன்னும் Truecaller அறிவிக்கவில்லை.

வீடியோ காலர் ஐடி பயனர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அழைக்கப்படும்போது தானாகவே இயங்கும் ஒரு குறுகிய வீடியோவை அமைக்க அனுமதிக்கிறது. பயனர்கள் உள்ளமைக்கப்பட்ட வீடியோ டெம்ப்ளேட்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம் அல்லது தங்கள் சொந்த வீடியோவைப் பதிவு செய்யலாம். இந்த அம்சம் அனைத்து ட்ரூகாலர் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் கிடைக்கும்.

ALSO READ:  இஸ்ரோ அடித்த செஞ்சுரி! வெற்றிகரமாக ஏவப்பட்ட 100வது ராக்கெட்!

இந்த புதிய அப்டேட் மூலம், கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு தனித்தனி டேப்களை Truecaller அறிமுகப்படுத்தும். இண்டர்ஃபேஸை சீரமைக்கவும், பயன்பாட்டின் முகப்புத் திரை மூலம் அழைப்புகள் மற்றும் SMS இரண்டையும் பயனர்கள் கண்காணிக்க உதவுவதற்கு இந்த மாற்றம் தேவைப்பட்டது என்று ட்ரூகாலர் நிறுவனம் குறிப்பிடுகிறது.

கால் ரெகார்டிங் ஆப்ஷன், முதலில் ட்ரூகாலரில் பிரீமியம் அம்சமாக வழங்கப்பட்டது. புதிய அப்டேட் இப்போது ஆண்ட்ராய்டு 5.1 மற்றும் அதற்கு மேல் இயங்கும் அனைவருக்கும் கிடைக்கும். கால் ரெகார்டிங் மூலம், உங்கள் சாதனத்தில் இந்த அம்சம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் அனைத்து கால்களையும் பயனர்கள் ரெக்கார்ட் செய்ய முடியும்.

எல்லாப் பதிவுகளும் மொபைலில் உள்ள மெமரி அல்லது மெமரி கார்டில் சேமிக்கப்படும். இதில், ட்ரூகாலர் நிறுவனத்தில் எந்த விதமான சேமிப்பும், அணுகலும் இல்லை என்று Truecaller தெளிவாகக் கூறுகிறது. பயனர்கள் Truecaller இல் இருந்தோ அல்லது மெமரி கார்டில் உள்ள வீடியோ ஆப் மூலமோ அந்தப் பதிவைக் கேட்கலாம், அல்லது பின்னர் டெலிட் செய்து விடலாம். மின்னஞ்சல், புளூடூத் அல்லது ஏதேனும் பகிரல் ஆப் சேவையைப் பயன்படுத்தி பதிவுகளைப் பகிரலாம்.

ALSO READ:  சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

கால் ரெக்கார்ட் என்பது, பயனர்களின் ஒரு விருப்பமான தேர்வு அம்சமாக இருக்கும். பயனர்கள் முழுத் திரையில் ஒரே ஒரு பட்டனில் தட்டினால் ரெக்கார்டிங் செய்யலாம், அல்லது தொடக்க ஸ்க்ரீனுக்கு செல்லலாம். கோஸ்ட் கால் மூலம், ட்ரூகாலர் பயனர்கள் எந்தப் பெயரையும், எண்ணையும், புகைப்படத்தையும் அந்த நபரிடமிருந்து அழைப்பதைப் போலத் தோன்றும்படி அமைக்க அனுமதிக்கும்.

Ghost Call – மூலம், பயனர்கள் தங்கள் போனில் தொடர்புகளில் இருந்து ஒரு தொடர்பைத் தேர்வுசெய்ய முடியும். இது தவிர, பயனர்கள் பிற்காலத்தில் கோஸ்ட் கால் அழைப்புகளை திட்டமிடவும் இந்த ஆப் அனுமதிக்கும். ட்ரூகாலர் பிரீமியம் மற்றும் கோல்ட் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கோஸ்ட் கால் கிடைக்கும்!

ட்ரூ காலர் இயக்கப்பட்டதும், புதிய விருப்ப அம்சமானது, இன்கம்மிங் போன் கால்களில் ஸ்பீக்கரில் பேச வைக்கும். சேமித்த கான்டெக்ட்கள் மற்றும் சாதாரண வாய்ஸ்கால்கள் அல்லது Truecaller HD வாய்ஸ்கால்கள் இரண்டிலும் Truecaller ஆல் அங்கீகரிக்கப்பட்ட எண்களுக்கு இந்த அம்சம் சப்போர்ட் செய்யும். பயனர்கள் ஹெட்ஃபோன்களை இயக்கியும் இதைப் பயன்படுத்த முடியும்.

ALSO READ:  இஸ்ரோ அடித்த செஞ்சுரி! வெற்றிகரமாக ஏவப்பட்ட 100வது ராக்கெட்!

கோஸ்ட் கால் போலவே, கால் அறிவிப்பும் (Call Announce) பிரீமியம் மற்றும் கோல்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

Entertainment News

Popular Categories