இன்று முதல் மூன்று நாட்கள் குற்றாலம் ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை .
தொற்றுநோய் வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டிய தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இன்று முதல் வருகின்ற இரண்டாம் தேதி வரை ஆகிய மூன்று தினங்கள் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.