குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் இன்டர்நெட்டை மிக இயல்பாக பயன்படுத்தி வரும் நேரத்தில், இன்டர்நெட் சர்ச் எஞ்சின்ஸ் பெரும்பாலும் அன்ஃபில்ட்டர்டு (unfiltered) அதாவது வடிகட்டப்படாத இடங்களாக இருக்கின்றன.
எனவே சிறு குழந்தைகள் அல்லது மிக இளம் வயதில் இருக்கும் குழந்தைகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பிரவுஸ் செய்வது நிச்சயமாக ஆபத்தானது. அடல்ட் கன்டென்ட் முதல் வன்முறை மற்றும் தவறான மொழி வரை, இன்டர்நெட்டில் உங்கள் குழந்தைக்கு தீங்கு விளைவிக்க கூடிய பல கன்டென்ட்கள் உலவுகின்றன.
எனவே ஒரு குழந்தை பிரவுஸ் செய்யும் போது குறிப்பிட்ட சர்ச் எஞ்சினில் வெளிப்படும் கன்டென்ட்களை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.
அதிர்ஷ்டவசமாக கன்டென்ட்களை கட்டுப்படுத்த ஏராளமான வழிகள் உள்ளன. அதிகம் பயன்படுத்தப்படும் சர்ச் எஞ்சின்களில் ஒன்றான Google Chrome, குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஆன்லைன் அனுபவத்தை உருவாக்க பெற்றோர் கட்டுப்பாட்டை (parental control) அனுமதிக்கிறது. Google Chrome பிரவுசரில் பேரண்ட்டல் கன்ட்ரோலை பயன்படுத்த சில வழிகள் உள்ளன.
எனவே கூகுள் க்ரோமில் பேரண்ட்டல் கன்ட்ரோல்களை எவ்வாறு செட் செய்யலாம் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
கூகுள் க்ரோமில் parental controls-ஐ எவ்வாறு செட் செய்வது?
பாதுகாப்பான ஆன்லைன் அனுபவத்தை (safe online experience) விரைவாக செட் செய்வதற்கான எளிதான வழி, SafeSearch-ஐ டர்ன் ஆன் செய்வது. இதை செய்ய, நீங்கள் உங்கள் Google அக்கவுண்ட்டில் உள்நுழைந்து (sign in) செய்து, preference setting-ற்கு சென்று SafeSearch mode-ஐ டர்ன் ஆன் செய்த பிறகு செட்டிங்க்ஸை save செய்ய வேண்டும். SafeSearch ஆன் செய்யப்பட்டு உள்ளதால் கூகுள் சர்ச்சஸிலிருந்து (Google searches) பெரும்பாலான வெளிப்படையான முடிவுகள் (explicit results) தானாகவே ஃபில்ட்டர் செய்யப்படும்.
Chrome-ஐ பயன்படுத்தும் போது உங்கள் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான மிக விரிவான வழி, Google Family Link-ஐ செட்டப் செய்து, நிர்வகிக்கப்படும் திட்டத்தில் (managed plan) அக்கவுண்ட்டை உருவாக்குவது அல்லது ஏற்கனவே உள்ள Gmail அக்கவுண்ட்டை லிங்க் செய்வது ஆகும்.
இந்த செட்டப்பை எனேபிள் செய்ய நீங்கள் ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு சாதனத்தில் Family Link-ஐ டவுன்லோட் செய்து, பின் செட்டப் வழியாக செல்ல வேண்டும். Google family link-ஐ எனேபிள் செய்வதற்கான படிப்படியான வழிமுறைகள் இங்கே..
1: உங்கள் iPhone அல்லது android மொபைலில் கூகுள் ஃபேமிலி லிங்க்கை (Google family link) இன்ஸ்டால் செய்யவும்.
2: Google family link App-ஐ ஓபன் செய்து setup-ற்கு செல்லவும்
3: லிமிட்டிங் ஸ்கிரீன் டைம் (limiting screen time) மற்றும் லிமிட் அன்ட் வியூ வெப் ஆக்டிவிட்டியை (limit and view web activity) செட் செய்யவும் மற்றும் குழந்தைகளின் ஃபோன் அல்லது க்ரோம்புக்கின் லொக்கேஷனை ட்ராக் செய்யும் அம்சத்தையும் ஆக்டிவேட் செய்யவும்.
4: இவை முடிந்ததும். மாற்றங்களை Save செய்யவும். இது உங்கள் குழந்தை பயன்படுத்த கூடிய ஆப்ஸ்களை நிர்வகிக்க உங்களை அனுமதிக்கும். உங்கள் குழந்தைகளை மேலும் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் supervised Google account-ஐயும் நீங்கள் செட்டப் செய்யலாம்.
இருப்பினும் உங்கள் குழந்தைகள் சில குறிப்பிட்ட வெப்சைட்களை அணுகுவதைத் தடுக்க நீங்கள் விரும்பினால் Chrome extension மூலம் எளிதாக செய்யலாம்.