பொதுமக்கள் ஆவின் பால் அட்டை பெற இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இத்தகைய சலுகையைப் பெற ஜனவரி மாதம் முழுவதும் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், ஆவின் அதிநவீன பழக்கங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இதனால் மாதம் லிட்டர் ஒன்றுக்கு 60 முதல் 90 வரை சேமிக்கலாம். ஆவின் பால் அட்டை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தால், அவர்களுக்கு உடனடியாக பால் அட்டை வழங்கப்படும்.
பால் சங்கங்களில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு மட்டும் மறுநாள் ஆவின் வட்டார அலுவலர்கள் மூலம் பால் அட்டை அளிக்கப்படும். இணையதளம் மூலமாகவும் புதிய பால் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையானது பொதுமக்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படமாட்டாது. மேலும் நுகர்வோர்கள் பால் அட்டை சலுகை குறித்த தங்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை 1800 425 3300 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாக தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு
www.aavin.tn.giv.in, www.aavinmilk.com என்ற
இணையதளங்களை அறியலாம்.