
தமிழகத்தில் மீண்டும் கொரோனா அசுர வேகம் எடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
தமிழக அரசு திடீர் தடை அறிவித்துள்ள நிலையில் சொர்க்கவாசல் திறப்புக்கு முந்தைய நாள் ஜனவரி 12 புதன்கிழமை இரவு 8 முதல் அதிகாலை 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது.
13 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள். வைகுண்ட ஏகாதசி திருவிழா திருவீதி உலா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் வளாகத்துக்குள் நடத்தி முடிக்கப்படும்.
மீண்டும் இயல்பு நிலை திரும்பும் வரை கோவில் உள்பகுதியில் நடைபெறும் உற்சவங்களில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.