இப்போது நடந்துகொண்டிருக்கும் CES 2022 தொழில்நுட்ப கண்காட்சியில் எச்எம்டி குளோபல் நிறுவனம் நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா சி100, நோக்கியா சி200, நோக்கியா ஜி100, நோக்கியா ஜி400 ஆகிய நான்கு சாதனங்களை தான் எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த நான்கு சாதனங்களும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இப்போது இந்த சாதனங்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
நோக்கியா சி100 மற்றும் நோக்கியா சி200 ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன. பின்பு நோக்கியா சி200 ஸ்மார்ட்போனில் 6.1-இன்ச் டிஸ்பிளே வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நோக்கியா சி100, நோக்கியா சி200 ஸ்மார்ட்போன்கள் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளன. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனங்கள். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நோக்கியா சி100, நோக்கியா சி200 ஸ்மார்ட்போன்களில் 4000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்
நோக்கியா சி100 ஸ்மார்ட்போனின் விலை $99 (இந்திய மதிப்பில் ரூ.7,300) ஆக உள்ளது. அதேபோல் நோக்கியா சி200 ஸ்மார்ட்போனின் விலை $119 (இந்திய மதிப்பில் ரூ.8,800) ஆக உள்ளது.
நோக்கியா ஜி100 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
அதேபோல் நோக்கியா ஜி100 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 சிப்செட் வசதி உள்ளது. பின்பு இந்த நோக்கியா ஜி100 ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் உள்ளன. குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது ஜி100 ஸ்மார்ட்போன் மாடல்.
நோக்கியா ஜி400 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. குறிப்பாக பெரிய டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.
அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி400 மாடல். மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த நோக்கியா ஜி400 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கியா ஜி400 ஸ்மாரட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. அதாவது மேக்ரோ கேமரா, அல்ட்ரா வைடு கேமரா ஆதரவுகளும் இவற்றுள் உள்ளன.
நோக்கியா ஜி100 ஸ்மார்ட்போனின் விலை $149 (இந்திய மதிப்பில் ரூ.11,000) ஆக உள்ளது. அதேபோல் நோக்கியா ஜி400 ஸ்மார்ட்போனின் விலை $239 (இந்திய மதிப்பில் ரூ.17,800) ஆக உள்ளது.