
செவ்வாய் கிராகத்தில் ஏலியன் நடமாட்டம் இருப்பதாகவும் ரோவர்கள் எடுத்ததாக பல புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சோசியல் மீடியாவில் பல விவாதங்களை தொடங்கிவைத்துள்ளன.
தற்போது அப்படித்தான் செவ்வாய் கிராகத்தில் ஏலியன் இருப்பதாக ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ பல்வேறு விவாதங்களை தோற்றுவித்துள்ளது. அதில் இருப்பது ஏலியன் என ஒருதரப்பினரும், இல்லை அது வெறும் பாறையை படமெடுக்கும் போது ஏற்பட்ட பிரதிபலிப்பு என்றும் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளது.
வானில் பறந்து செல்லும் பொருட்கள், விண்கல் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஸ்காட் சி வேரிங் என்பவர் தன்னுடைய இணையதளத்தில் செவ்வாய் கிரகத்தில் ஏலியன் இருப்பதாக கூறியுள்ளார்.
அதில் அண்டார்டிக் பகுதியில் இதய வடிவிலான இடைவெளிக்குள் இருந்து தனக்கு கிடைத்த டிஸ்கை ஆய்வு செய்து பார்த்ததாகவும், அதில் ஏப்ரல் 2021ல் ரோவர் எடுத்த படங்களை கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்காட் சி வேரிங் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பாறை மீது மனிதர் ஒருவர் ரிலாக்ஸாக படுத்திருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
சாதாரணமாக மனிதர்கள் படுத்திருப்பதை போன்று ஒருகையை தலைக்கு அடிப்பக்கத்தில் வைத்து ஒருபுறமாக திரும்பி படுத்துள்ளது போல் காட்சியளிக்கிறது.
இதனை பார்த்துவிட்டு பலரும் செவ்வாய் கிராகத்தில் ஏலியன் இருப்பதாக பேச தொடங்கியுள்ளனர். மேலும் செவ்வாய் கிராகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான 100 சதவீத ஆதாரம் என இதை தெரிவிக்கும் அவர், பாதுகாப்பான தூரத்தில் படுத்துக்கொண்டு ஒருவர் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய ரோவரை பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இது மிகப்பெரிய கண்டுபிடிப்போ, ஆராய்ச்சியில் அடுத்த கட்ட முன்னேற்றமோ கிடையாது. ஏற்கனவே பலமுறை செவ்வாய் கிராகத்தில் உயிர்கள் இருப்பதாக மக்களை நம்ப வைக்க செய்யப்பட்ட கண்கட்டி வித்தைகளில் ஒன்று என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிலரோ இது டைட்டானிக் படத்தில் ரோஸ் கடலுக்கு நடுவில் படுத்திருப்பதை போல் இருப்பதாகவும், ஜூராஸிக் பார்க் படத்தில் ஜெஃப் கோல்ட்ப்ளமின் சம்பந்தப்பட்ட காட்சிகளை நினைவூட்டுவதாகவும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இருப்பினும், அந்த போட்டோ செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தொடர்பாக பலர் வாதாடி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக போர் கவசம் அணிந்தது போன்ற ஏலியன், பறவைகள் ஆகியவற்றின் புகைப்படங்கள் கூட செவ்வாய் கிரகத்திற்கு ஆய்வுக்குச் சென்ற ரோவர்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டதாக சோசியல் மீடியாவில் தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.