
சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகி, வருமானம் ஈட்டுவது என்பது இப்போதைய டிரெண்டிங்கில் சாத்தியமானது என்பதால், பலரும் சோஷியல் மீடியாக்களை உபயோகிக்க தொடங்கியுள்ளனர்.
ஆனால், அனைவரும் வெற்றி பெறுவதில்லை என்பது நிதர்சனம். அதற்கு முக்கிய காரணம், சில தொழில்நுட்ப தகவல்களை தெரியாமல் இருப்பது தான்.
இன்ஸ்டாகிராமைப் பொறுத்தவரை அன்றாடம் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது. நாள்தோறும் அதனை பின்பற்ற முடியுமா? என்றால் சாத்தியமில்லை. அதற்காக தான் எப்போதும் உதவக்கூடிய சில சாத்தியமான 10 டிப்ஸ்களை உங்களுக்கு கூற இருக்கிறோம்
- கன்டென்ட் பதிவு
ஒரே இரவில் நீங்கள் இன்ஸ்டாகிராம் பிரபலமாகிவிட முடியாது. இந்த செயலியை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருப்பதால், நீங்கள் தொடர்ச்சியாக கன்டென்டுகளை பதிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
- ஒத்துழைப்பு
உங்கள் பிராண்டை நீங்கள் பிரபலமாக்க விரும்பினால் பணம் செலவழிப்பதற்கு முன்பு அல்லது விளம்பரம் மேற்கொள்வதற்கு முன்பு பார்னர்ஷிப் உருவாக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அதாவது ஏற்கனவே இருக்கும் பிரபலமானவர்களிடம் சேர்ந்து உங்கள் கன்டென்டுகளை பதிவிடுவது சிறந்தது.
- பிராண்ட் உருவாக்குதல்
நீங்கள் எந்தவழியில் பயணிக்கிறீர்கள் என்பது முக்கியம். எந்த ஜானரில் நீங்கள் செல்ல முடிவெடுக்கிறீர்களோ, அது தொடர்பான கன்டென்டுகளை தொடர்ந்து பதிவிடுங்கள். தொடர்ச்சியாக ஒரே பிரிவில் கன்டென்டுகளை பதிவிடும்போது, ஒரு குறிப்பிட்ட குழுவினரிடையே நீங்கள் பிரபலமாக மாறுவீர்கள்.
- உரையாடல்
இன்ஸ்டாகிராம் தளத்தில் உங்களுக்கு என ஒரு குழுவை உருவாக்கியவுடன், அவர்களுடன் தொடர்பில் இருப்பது அவசியம். உங்கள் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடுங்கள்.
அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் சமூக தொடர்பு விரிவடையும். லைவ் மற்றும் டிஎம் செஷன்களை நடத்தலாம்
- போட்டிகள் மற்றும் பரிசுகள்
உங்கள் பக்கத்தில் போட்டிகளை அடிக்கடி நடத்துங்கள். அந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளைக் கொடுக்கலாம். இது உங்கள் பக்கத்தின் மீதான நம்பிக்கையை யூசர்களுக்கு கொடுக்கும். இவை உங்கள் பக்கத்தின் மீதான கவனத்தை ஈர்க்கும் மிக முக்கியமான வழி.
- ஹேஷ்டேக்
நீங்கள் பதிவிடும் கன்டென்டுகளுக்கு ஏற்ப சரியான ஹேஸ்டேக்குகளை தேர்ந்தெடுப்பது அவசியம். இதன் மூலம் உங்கள் கன்டென்டுகள் விரைவாக யூசர்களை சென்றடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. தவறான ஹேஸ்டேக்குகளின் கீழ் பதிவிடும் நல்ல கன்டென்டும் வீணாகபோக வாய்ப்புள்ளது.
- கன்டென்டை மாற்றுதல்
கன்டென்டில் புதுமை இருந்து கொண்டே இருக்க வேண்டும். வெறுமனே ஒரே மாதிரியான கன்டென்டுகள் இருந்தால், யூசர்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கன்டென்டில் புதுமை, அதற்காக டீசர் வெளியிடுதல் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
- ஷேரிங் கன்டென்ட்
ஷேரிங் கன்டென்ட் என்பது அனைவரும் பகிரக்கூடிய கன்டென்டுகளாகும். இப்போது டிரெண்டிங்கில் இருக்கும் கன்டென்டுகளுக்கு தொடர்பாக உங்களின் கன்டென்ட் இருந்தால், நீங்கள் சீக்கிரமாக ரீச் ஆகலாம். மேலும், பரவலான ஆதரவைப் பெறும் கன்டென்டுகளை உருவாக்க, நாட்டு நடப்புகளை அவதானிக்க வேண்டும்.
இந்த 8 டிப்ஸ்களும் உங்களை விரைவாக இன்ஸ்டாகிராம் பிரபலமாக மாற்றும்.