அபராதம் செலுத்துவதைத் தவிர்க்க, உங்கள் பான் கார்டு அல்லது ஆதார் அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்.
அந்த வகையில், வங்கிக்கணக்குடன் பான் கார்டை இணைக்கும் செயல்முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.. எனவே எஸ்பிஐ, சேமிப்பு வங்கிக் கணக்குடன் உங்கள் PAN கார்டை எவ்வாறு இணைப்பது என்பதை பார்க்கலாம்.
SBI இன் இன்டர்நெட் பேங்கிங் போர்டல் – www.onlinesbi.com மூலம் SBI சேமிப்புக் கணக்குடன் PAN கார்டை இணைக்கவும்
ஆன்லைனில் எப்படி இணைப்பது..?
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.onlinesbi.com என்பதை பார்வையிடவும்.
படி 2: ” My Accounts” என்பதன் கீழ் “Profile-PAN Registration” என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: கணக்கு எண் மற்றும் பான் எண்ணைத் தேர்ந்தெடுத்து “Submit” என்பதைக் கிளிக் செய்யவும்
படி 4: உங்கள் கோரிக்கை இப்போது செயலாக்கத்திற்காக SBI கிளைக்கு அனுப்பப்படும்.
படி 5: உங்கள் கோரிக்கை 7 நாட்களில் செயல்படுத்தப்படும்.
படி 6: அதன் நிலை உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
நீங்கள் இன்டர்நெட் பேங்கிங்கில் பதிவு செய்யவில்லை என்றால், டெபிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி உங்கள் பான் எண்ணையும் கணக்குடன் இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
SBI கிளைக்குச் சென்று வங்கிக் கணக்குடன் பான் கார்டை எப்படி இணைப்பது..?
படி 1: உங்களுக்கு அருகில் உள்ள SBI கிளைக்குச் செல்லவும்
படி 2: உங்கள் பான் கார்டின் நகலை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்
படி 3: ‘கோரிக்கை கடிதத்தை’ நிரப்பவும்
படி 4: பான் கார்டின் ஜெராக்ஸ் நகலுடன் கடிதத்தை சமர்ப்பிக்கவும்.
படி 5: சரிபார்த்த பிறகு, செயல்முறை முடிவடையும்.
படி 6: இணைப்பின் நிலை குறித்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS ஒன்றைப் பெறுவீர்கள்.