லண்டனில் இருந்து கரிரீஸ் கிரீஸ் நோக்கி பறந்துகொண்டிருந்த Jet 2 என்ற விமானத்தில் ஆல்பி மற்றும் கென்னத் சகோதர்கள் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது இருவரும் மது அருந்திருந்ததாக தெரிகிறது.
இருவரும் மது போதையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சண்டையின் ஆரம்பமாக ஒருவர் மீது மற்றொருவர் சிறுநீர் கழித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதம் பெருகி சத்தமிட்டு இருவரும் போதை தலைக்கேறி சண்டை போட்டுக்கொண்டனர். முதலில் பேச்சு வார்த்தையாக இருந்த சகோதரர்கள் சண்டை சற்று நேரத்தில் கைகலப்பு ஆகியது.
இதனால் சக பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பின்பு சகோதரர்களின் சண்டையால் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலாஸார் இருவரையும் விமானத்திலிருந்து இழுத்துச்சென்றனர்.
சக பயணி ஒருவர் இச்சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ பதிவும் செய்துள்ளார். பின்னர் ஆல்பி மற்றும் கென்னத் சகோதர்களுக்கு 50 ஆயிரம் யூரோ அபராதமும், ஜெட் 2 விமானங்களில் பயணிக்க வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.
மேலும் பெயர் குறிப்பிட விரும்பாத சக பயணி இந்த வீடியோவை சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.