
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சி கவுன்சிலரை கோபமாக தலையில் அடிக்கும் ‘வீடியோ’சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி பெரியமிளகுபாறையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேரு குடிநீர் தொட்டியைத் திறந்து வைத்தார்.
அப்போது பெண்கள் தண்ணீர் பிடிக்க முயன்ற போது தண்ணீர் பிடித்துக் கொடுக்க முயன்ற திருச்சி மாநகராட்சியின் 54வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் புஷ்பராஜை, அமைச்சர் கே.என். நேரு தலையில் கோபமாக ஓங்கி அடித்தார். இதைக் கண்டு சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.