தனியொருவராக பேருந்தை மறித்து போராட்டம் நடத்திய திமுக பெண் தொண்டரை மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார். ஆனால் அதே சமயம், போராட்டத்தின் போது தன் இடுப்பைக் கிள்ளிய திமுக.. பொறுப்பாளர் குறித்து பெண் நிர்வாகி கூறிய புகாருக்கு எந்த அழைப்பும் ஆட்சேபணையும் இதுவரை இல்லை!
தனி ஆளாக பேருந்தை மறித்து போராட்டம் நடத்திய திமுக பெண் தொண்டரை அக்கட்சியின், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னைக்கு வரவழைத்து வாழ்த்தினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திமுக., உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வியாழக்கிழமை முழு அடைப்பு, சாலைமறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த திமுக., தொண்டர் தெய்வநாயகி, தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பேருந்தை கையில் திமுக கொடியுடன் தனி ஆளாக மறித்து நின்றார்.
இந்தப் போராட்டத்தின் வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து தெய்வநாயகியை சென்னைக்கு வரவழைத்த மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
இந்நிலையில், அவர் ஏன் தன்னந்தனியாளாக சாலையில் நின்று போராடினார் என்பதற்கு இப்படி விளக்கம் கொடுத்திருக்கிறார் ஒரு நெட்டிசன்…
அக்கா ஏன் தனியா போராடுறீங்க?
அட ஏப்பாநீவேற நான் எத்தனை வருசமா திமுகவில் இருக்கேன்…. எனக்கு தெரியாதா #இடுப்புகிள்ளிதிமுக pic.twitter.com/vqMbnaEARP
— ☉ஆதவன்🕊⤵ (@adhavan_c) April 6, 2018
இதே நேரம், கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த போராட்டத்தில் திமுக., பெண் நிர்வாகி ஒருவர், திமுக பொறுப்பாளர் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தன் இடுப்பைக் கிள்ளி பெண்களையே கேவலப் படுத்தியதாகவும் இது குறித்து புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என்றும், இதற்கு செயல் தலைவர்தான் உடனடியாக கூப்பிட்டு விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் கொடிபிடித்தார். ஆனால் அவர் வீடியோ வைரலான நிலையிலும், அறிவாலயத்தில் இருந்து அழைப்பு ஏதும் இல்லை!