செய்தி: கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய தில்லியில் இருந்து கர்நாடகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணித்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், தரையிறங்க தடுமாறியது. மூன்றாவது முயற்சியில் விமானம் தரையிறங்கியது. இதனால் காங்கிரஸார் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நடந்த நிகழ்வு குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடி ராகுலுடன் போனில் தொடர்பு கொண்டு, நடந்தது குறித்து கேட்டறிந்தார்.
அரசியல்: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற காங்கிரஸார் மேற்கொண்ட அரசியல் தந்திரம். ராகுலை கொல்ல சதி என்ற பிரசாரத்தை மேற்கொண்டு அனுதாப அலை உருவாக்க முயற்சி. இக்கட்டான தருணத்தில், ராகுல் பதட்டப் படாமல் அமைதியாக இருந்து விமானத்தை தரை இறக்க விமானிகளுக்கு உதவினார் என்று கூறி கதாநாயகனாக்க கர்நாடக காங்கிரஸார் முயற்சி. அதற்காக, விமான பைலட்டான ராஜீவ் மகன், விமான பைலட்டுக்கான நுணுக்கங்களை தெரிந்து கொண்டவர் என்றும் அவரால்தான் விமானம் பத்திரமாக தரை இறங்கியது என்றும் செய்தி பரப்பல்…
சமூகத்தில் பின்விளைவுகள்:
* ராகுல் வேலைக்கு ஆகவில்லை என்று கருதிய சோனியா, பிரியங்கா வதேராவை காங்கிரஸின் எதிர்காலமாக முன்னிறுத்த, ராகுலை தியாகம் செய்யத் தயார் ஆகிவிட்டார்…
** தன் அப்பா ஒரு காலத்தில் பைலட் லைசென்ஸ் வைத்திருந்தார் என்பதற்காக, ராவுல் பையன், தனக்கும் ப்ளேன் ஓட்டத் தெரியும் என்று பீலா விட்டு, கோளாறான ப்ளேன் காக்பிட்டுக்குள் நுழைந்து, “ஆங், அப்பிடித் திருப்பு, இந்தா, இதைத் திருகு, ப்ரேக்க அமுக்கு, போடு தகிடதை” என்று அடித்த கூத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல,
காங்கிரஸ் அடிப்பொடிகள், “ஆகாகா, எங்கள் தலைவர் எப்பேர்ப்பட்ட ஆபத்பாந்தவ புத்திசாலி, கூலாக எந்த ஆபத்தையும் சமாளிக்க வல்ல தத்திமான்” என்றெல்லாம் பிதற்றுவது!
ஓட்டை ப்ளேனை வாடகைக்கு எடுத்துவிட்டு, இந்தக் கரகாட்ட கோஷ்டி, இந்த அழகில் PMO ஆபீசுக்குப் போன் போட்டு ஒரே கம்ப்ளெய்ன்ட்சாம்.
மோடிதான் ப்ளேனை ரிப்பேர் செய்து விட்டாராமா? அடேய், லூசுங்களா, முடியலடா!
காங்கிரஸ் உருப்பட வழியே இல்லை. #CongressMuktBharat