November 28, 2021, 8:06 am
More

  இன்னும் ஒருநாள்… ஆயினும் பரபரப்பு! 5 மாநில தேர்தல்… யார் ஜெயிப்பார்?

  modi advani1 - 1

  அனிருத் குமார் மிஸ்ராவின் எக்சிட் போல்!

  பிஜேபிக்கு சாதகமான அனைத்து எக்சிட் போல்களையும் விஞ்ஞான ரீதியாக பார்த்து விட்டோம். இனி எஞ்சி யிருப்பது ஜோஷியம் தான். அதிலும்
  போய் ஜோஷியத்தில் பிஜேபி வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறதா என்று பார்ப்போம்.

  ஜோசியம் என்றவுடன் மரத்தடியில் அமர்ந்து கொண்டு வாம்மா மீனாட்சி ஐயா மோடி பெயருக்கு ஒரு நல்ல சீட்டை எடுத்து போடு என்று கூண்டில் இருந்து கிளியை வரவழைத்து அது எடுத்து போடும் சீட்டை பார்த்து அள்ளி விடப்படும் கிளி ஜோசியம் அல்ல. இது ட்விட்டர் ஜோசியம். அனிருத் குமார் மிஸ்ராவின் ஆருடம்..

  அனிருத் குமார் மிஸ்ரா இந்தியாவில் நாஸ்டர்டாமஸ் மாதிரி பெயர் எடுக்க வேண்டும் என்று உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை கல்யாணம் எப்பொழுது நடைபெறும் என்பதில் இருந்து மரணம் வருவது வரை சென்செக்ஸ் புள்ளிகளில் இருந்து பூகம்பம் வருவது வரை உள்ளூர் ஐபிஎல்லில் இருந்து உலக் கோப்பை
  புட்பால் வரை அனைத்திலும் நுழைந்து
  அனிருத் ஆருடம் கூறிக் கொண்டு இருப்பார்.

  உலக மீடியாக்கள் அனைத்தும் அமெரிக்காவும் வடகொரியாவும் மல்லுக்கு நிற்பதால் எப்படியும் அணு ஆயுதப் போர்வருவது உறுதி என்று எழுதிக் கொண்டு இருந்த பொழுது அனிருத் ஒரு ட்வீட் செய்து இருந்தார்.

  அதில் வெய்ட்.. இன்னும் சில
  மாதங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து பேசுவார்கள் அப்பொழுது எல்லாம் சரி
  யாகி விடும் என்று கூறினார்.

  உலகமே அமெரிக்கா வட கொரியா மோதலை பார்த்து விட்டு அணு ஆயுதப்போர் வருமா? என்று
  கவலையில் இருக்க… நோ.. இன்னும் சில மாதங்களில் இரு நாட்டு அதிபர்களும் அதுவும் பரம எதிரிகளாக இருக்கும் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து பேசுவார்கள் என்று யாராலும் நினைக்க முடியாது.

  ஆனால் அனிருத் அதை ஆருடம் கூறி இருந்தார். அவரின் கணிப்பு படியே டொனால்ட் டரம்ப்பும் கிம் ஜாங் உன்னும் ஜூலை மாதம் சிங்கப்பூர்க்கு வந்து கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்திய பொழுது எனக்கு கொஞ்சம் பிரமிப்பாகவே இருந்தது.

  அந்த ஜூலை மாதத்தில் கூட சந்திரனின் பார்வை இப்பொழுது சரியில்லை இன்னும் 20 நாட்களில்
  புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் மரணங்கள் நிகழும் என்றார். சரியாக அந்த 20 நாட்களுக்குள் கருணாநிதி அடுத்து வாஜ்பாய் என்று போய்
  சேரந்தார்கள்.

  சரிப்பா.. வயசானவர்கள் போய் சேர்வது இயல் பான விசயம் தானே என்று நீங்கள் கேட்கலாம். இழுத்துக் கொண்டு இருக்கும் உயிர் எப்பொழுது போகும் என்று கூறுவதற்கும் ஒரு ஞானம் வேண்டும் அல்லவா.. அது அனிருத்திடம் இருக்கிறது.

  சென்ற மாதம் அனிருத்துக்கு தீபிகா படுகோனே ட்வீட் செய்து நீங்கள் கூறியது மாதிரியே எனக்கு நவம்பர் மாதம் திருமணம் என்று கூறியிருந்தார்.
  இதற்கு அனிருத் 2017 ஆகஸ்ட் டில் கூறியிருந்த தீபிகா படுகோனே வுக்கு 2018 நவம்பர் டிசம்பரில் திருமணம் நடைபெறும் என்று கூறியிருந்த ட்வீட்
  டை நினைவு படுத்தி இருந்தார்.

  ஒருநாள் வானத்தில் நிலாவில் ஒரு பாம்பு வட கிழக்காக பார்த்து நிற்கிறது. இது நல்லது அல்ல. வட கிழக்கு ஆசிய நாடுகளி்ல் பூகம்பம் வரும் என்பார். அடுத்த சில நாட்களில் ஜப்பான் அருகே
  பூகம்பம் 5.6 ரிக்டர் என்று செய்தியை பார்ப்பேன்.

  ஷேர் மார்கெட் உயரும் என்பார் சென்செக்ஸ் உயர்ந்து கொண்டே வரும். இப்பொழுது நேரம் சரியில்லை என்பார் புள்ளிகள் இறங்கி கொண்டே இருக்கும். விளையாட்டிலும் ஐபிஎல் பைனல்  வரை ஆருடம் கூறிக்கொண்டே இருப்பார்.

  கடந்த செப்டம்பர் மாதம் இவர் ஒரு ட்வீட் செய்து இருந்தார்.. இன்னும் சில நாட்களில் அதாவது 7-19 நாட்களில் பெட்ரோல் டீசல் விலை குறைய ஆரம்பித்து படிப்படியாக பழைய விலைக்கே வரும் என்றார்.. இவர் ஆருடம் கூறிய செப்டம்பர் மாதத்தில்
  பெட்ரோல் விலை 90 ரூபாயை எட்டி யிருந்தது.

  யாராலும் நம்ப முடியுமா? இவர் ஆருடம் கூறிய  நாளுக்குள் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கு 5 ரூபாயை குறைந்தது. அதற்கு பிறகு தொடர்ந்து
  குறைந்து கொண்டே வருகிறது. அநேகமாக மோடி ஆட்சியில் 2015 பிப்ரவரியில் இருந்த குறைந்த பட்ச பெட்ரோல் விலையான 56 ரூபாய்க்கு பெட்ரோல் விலை வந்து விடக்கூடும்.

  ஆச்சரியம் அல்லவா..பெட்ரோல் விலை இன்னும் 7-19 நாளில் இருந்து குறைய ஆரம்பித்து பழைய விலைக்கே திரும்பி விடும் என்று ஆருடம் கூறுவது
  நிச்சயமாக ஆச்சரியமான விசயம் தான். உடனே உங்களுக்கு தேர்தலுக்காக மத்திய அரசு விலையை குறைத்தது என்று தோன்றலாம். தேர்தலுக்காக
  விலை உயராமல் வைத்து இருப்பார் களே தவிர குறைத்து கொண்டே வர மாட்டார்கள்.

  சரிப்பா போதும் அரசியல் மேட்டருக்கு வா என்கிறீர களா..அனிருத் இந்த வருட ஆரம்பத்தில் வருகிற கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலில் பிஜேபிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆனாலும் மெஜாரிட்டி கிடைக்காது. மெஜாரிட்டி க்கு 5-6 சீட்கள் குறைவாகவே கிடைக்கும் என்றார்.

  அதன்படியே பிஜேபிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை .முதல்வராக பதவியேற்க இருந்த எடியூரப்பாவுக்கு இந்த நாளில் இந்த நேரத்தில் பதவி யேற்றால் நல்லது என்றார்.. ஆனால் எடியூ ரப்பா அவருக்கு உகந்த நேரத்தில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

  அன்றே எடியூரப்பா நிலைக்க மாட்டார். இனி பிஜேபி இந்த வருடம் டிசம்பரில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றார். எடியூரப்பா வும் மெஜாரிட்டி யை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்ய காங்கிரஸ் ஜனதா தள கூட்டணி ஆட்சி ஓடிக் கொண்டு இருக்கிறது கர்நாடகா வில் பிஜேபி ஆட்சி மீண்டும் வரும்
  என்று அனிருத் கூறிய டிசம்பர் மாதம் தான் இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கிறது

  கர்நாடகா விலும் கலாட்டாக்கள் ஆரம்பித்து விட்டது.. சித்தராமையா ஆதரவாளர்கள் 50 பேர் ஒன்று கூடி
  சித்தராமையாவை முதல்வராக்க வேண்டும் என்று கொடி பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.. ஆக
  அனிருத் ஆருடம் படி கர்நாடகாவில் டிசம்பர் புரட்சி ஆரம்பித்து விட்டது.

  திரிபுரா தேர்தலில் பிஜேபி வெற்றி பெரும் என்றார். மோடிக்கு இன்னும் சில மாதங்களுக்கு நெருக்கடி இருக்கும் என்றார். ரபேல் டீலிங் வந்து நின்றது.
  ஆனாலும் இதை எல்லாம் தாண்டி 2019 ஜனவரிக்கு பிறகு மோடியின் புகழ் கொடி கட்டி பறக்கும் என்று
  கூறி இருக்கிறார்.பார்ப்போம்..

  இதைவிட முக்கியமாக வரும் பாராளுமன்ற தேர் தலில் பிஜேபிக்கு மட்டும் 300 தொகுதிகள் கிடை
  க்கும் என்று கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாது உத்தர பிரதேச த்தில் பிஜேபிக்கு 70 தொகுதிகள் கிடைக்கும் பகுஜன் சமாஜ் சமாஜ் வாடி கூட்டணி யால் பிஜேபி யை வீழத்த முடியாது என்று கூறி இருக்கிறார்.

  போதும்ப்பா…. சட்டிஸ்கர் மத்திய பிரதேசம் ராஜஸ் தான் மூன்று மாநில தேர்தல் பற்றி அனிருத் என்ன கூறினார் .. என்கிறீர்களா.. இதோ வந்து விட்டேன்

  அனிருத் மே மாதத்தில் மூன்று மாநிலங்களிலும்  பிஜேபியே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமல்ல கடந்த
  அக்டோபர் மாதமே பிஜேபிக்கு மத்திய பிரதேசத்தில் 115ல் இருந்து 121 தொகுதிகள் வரை கிடைக்கும் ராஜஸ்தானில் பிஜேபிக்கு 94-96 தொகுதிகள் என்று கூறிவிட்டு மெஜாரிட்டி கிடைக்காது என்றும்
  கூறி இருந்தார்.

  இப்பொழுது தேர்தல் முடிந்த பிறகு இது தான்  என்னுடைய எக்சிட் போல் என்று அக்டோபரில் செய்த ட்வீட்டையே 7 ம் தேதி ட்வீட் செய்து இருந்தார்.. ஆக அனிருத் ஆருடம் படி மூன்று மாநிலங் களிலும் பிஜேபி ஆட்சியே என்று கூறுகிறேன்..

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,746FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-