மோடியின் சாதனைப் பட்டியலுடன்… அசத்தும் ஆட்டோக்காரர்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
autokarar modi man - 2026

தேர்தல் வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாலு மாதங்களே உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரசாரங்களும் தொடங்கி விட்டன. கூட்டணிகள் இன்னும் கோலோச்சவில்லை என்றாலும், அணிகளின் அவுட்லைன் மட்டும் அகிலத்துக்கும் தெரிந்துவிட்டது.

இந்நிலையில், தன்னிச்சையாக ஓர் ஆட்டோக்காரர், திருச்சி நகரில் மோடியின் சாதனைகளைப் பட்டியலிட்டு ஒட்டி, ஊரில் சுற்றிச்சுற்றி வருகிறார்..!

திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் “மாவட்ட செயலாளர் திருஞானம்” தான் இந்த அசத்தலுக்குச் சொந்தக்காரர்.

திருஞானம் தமது ஆட்டோவில் நமது மக்கள் பிரதமரின் சாதனைகளைப் பட்டியல் இட்டு அதைத் தனது ஆட்டோவில் ஒட்டி பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார் .. #ModiForTN

  • புகழ் மச்சேந்திரன் புகழ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.