
விபரீதங்கள் பல ஏற்பட்டுள்ளதாலும், சமூகத்துக்கு விரோதமான வகையில் திகழ்வதாலும் டிக்டாக் செயலியை தடை செய்ய வலியுறுத்துவோம் என்று அமைச்சர் பேரவையில் கூறினார்.
டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பேரவையில் வலியுறுத்தினார்., இந்த செயலி மூலம் ஆபாசமான வீடியோக்கள் பரவுவதாகவும், இதை மத்திய அரசு உதவியுடன் தடை செய்ய வேண்டும் என்றும் தமிமுன் அன்சாரி கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
முன்னர் உயிரைப் பறித்த விபரீத விளையாட்டான புளுவேல் கேம் தடை செய்யப் பட்டதைப் போன்று, டிக்டாக் செயலியையும் தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கேள்விக்கு அமைச்சர் மணிகண்டன் பதில் அளித்தார்.



