ஹிந்து மதம் என்று பெயரே கிடையாதா கிடையாது என்று யார் சொன்னது? நாம் சொல்கிறோம்! ஆனால் பெயர் கிடையாது! உண்மையில் இந்து மதம் என்ற பெயர் எப்படி வந்தது?
வெளிநாட்டுக் காரர்கள் எல்லாம் இங்கு வந்து படையெடுத்து வந்தார்கள் சிந்து நதியைக் கடந்து வரும்போது அதைத் தாண்டி இருந்தவர்களை இவர்கள் இந்துக்கள், இந்து மதம் என்று அவர்கள் சொன்னார்கள்… சிந்து என்று சொன்னதை இந்து என்று சொன்னார்கள் என்று அந்த காலத்திலிருந்து சொல்லி வருகிறார்கள்.
ஆனால் அதற்குப் பின்பு பார்த்தீர்கள் என்றால் சனாதன தர்மம் என்று பெயர் சனாதன தர்மம் என்றால் தொன்றுதொட்டு இருப்பது என்று பெயர்! வைதீக மதம் என்று சொன்னார்கள்! அதற்கும் பெயர் கிடையாது! ஏன் பெயர் இல்லை என்றால்… தொடக்க காலத்தில் ஒரே மதம் தான் இருந்தது. ஒரே மதம் என்று சொல்லும்போது அதற்கு பெயர் எதற்கு?
இரண்டு இருந்தால் இது ஒன்று அது ஒன்று என்று சொல்ல முடியும். இருப்பது ஒன்றுதான் என்று சொல்லும்போது பெயரே தேவைப்படவில்லை.
இந்து மதம் மதம் என்று சொல்வது, மதம் என்பது நம்பிக்கை, சிந்தனை. .. என்று துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி விளக்கிய வீடியோ பதிவினை இப்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
கமலஹாசனுக்கு சரியான பதிலடியாக இந்த வீடியோ பதிவில் சோ ராமசாமி தெளிவாக விளக்கி உள்ளார் என்று கருத்துக்களும் களை கட்டுகின்றன..




