
இனி வங்கிகளில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பணமாக எடுத்தால் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
காகித பண வர்த்தனையை குறைப்பதற்காகவும், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணபரிவர்த்தனையையும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதே போன்று அனைத்து வகையான அதிக அளவிலான பணம் எடுப்பதற்கும் ஆதாரை கட்டாயம் ஆக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனி நபர்களின் பண பரிவர்த்தனையை எளிதில் கண்காணிக்கவும், அவர்களின் வரித்தாக்கல் கணக்கின் உண்மை தன்மையை கண்டறியவும் இது உதவி கரமாக இருக்கும் என அரசு கருதுகிறது.
அதே சமயம், ரூ.50,000 க்கு மேல் பணம் டெபாசிட் செய்யவும் பான் கார்டு கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.
ரூ.10 லட்சத்திற்கு மேல் அனைவரும் பணபரிவர்த்தனை செய்யப் போவதில்லை. மிக சில தனிநபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமே அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்வர்.
அதனால் அரசின் இந்த முடிவு நடுத்தர மற்றும் ஏழை மக்களை பாதிக்காது என கூறப்படுகிறது. ஜூலை 5 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில். அரசின் இந்த பரிசீலனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



