மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதை அடுத்து அங்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலியில் இருந்து செல்லும் ஜாம்நகர் ரயில், சென்னை எழும்பூரில் இருந்து செல்லும் தாதா விரைவு ரயில், சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் மும்பை சிஎஸ்டி விரைவு ரயில், நாகர்கோயில், கன்னியாகுமரியில் இருந்து செல்லும் மும்பை சிஎஸ்டி விரைவு ரயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மும்பையில் கனமழை ! ரயில்கள் ரத்து ! தென்னக ரயில்வே அறிவிப்பு !
Popular Categories



